தென்மாவட்டத்தில் உள்ள ஒரு தொகுதியில் போட்டியிடும் ஆளுங்கட்சியைச் சேர்ந்த மீசைக்கார பிரமுகர், நகைக் கடைகளில் அடகு வைத்துள்ள நகைகளை மீட்க பைசா கொடுத்து பேருதவி புரிந்து வருவதாக பரபரப்பாக பேசிக் கொள்கிறார்கள்.
தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நாளில் இருந்து தென்மாவட்டத்தில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. இதில் ஒரு தொகுதியில் ஆளும் கட்சியில் அமைச்சராக உள்ள பெரிய மீசைக்காரர் சிவகங்கைச் சீமைக்கு உட்பட்ட ஒரு தொகுதியில் போட்டியிடுகிறார்.
தனக்கு வாக்களிக்கும் பொது மக்களுக்கு ஏதாவது நல்லது செய்ய வேண்டுமே என நினைத்த அவர் ஒரு புதிய வழியைக் கண்டுபிடித்துள்ளார்.
அது என்னவென்றால், ஏழை எளிய மக்கள் தங்களது தங்க நகைகளை வங்கியிலோ அல்லது அடகுக் கடைகளிலோ அடகு வைத்திருந்தால் அது குறித்த முறையான ரசீதுகளுடன் மீசைக்காரரை அணுகினால் போதும். அந்த ரசீதைப் பார்த்து பரிசீலித்து, அடகு நகைகளை மீட்டுக் கொடுத்து உதவுகிறார்களாம். மீசைக்கார நண்பா, உனக்கு பாசம் அதிகம்ப்பா என்று பாடாத குறையாக அடகு வைத்த நகைகளை மீட்டவர்கள் பாராட்டி மகிழ்கிறார்களாம்.
மீசைக்காரரின் இந்த அட்டகாச அதிரடி ஸ்டண்ட்டைப் பார்த்து எதிர்த் தரப்பு டேமேஜாகி காணப்படுகிறது. இது நமக்குப் புரியாமல் போய் விட்டதே என்று வேறு ஏதாவது சூப்பர் யோசனை தெரிகிறதா என்று ரூம் போடாத குறையாக உட்கார்ந்து யோசித்து வருகிறார்களாம்.
No comments:
Post a Comment