வெற்றிப் படங்களை வரிசையாக களமிறக்கும் தயாரிப்பாளர் ரெட் ஜெயண்ட் மூவீஸ் உதயநிதி ஸ்டாலின் ஹீரோவாக அறிமுகமாகும் படம் ஒரு கல் … ஒரு கண்ணாடி..! இதை சுருக்கமாக ஓகே ஓகே என்கிறார் இயக்குனர் ராஜேஷ். சென்னையில் கடந்த பதினாராம் தேதி முதல் பட்டையைக் கிளப்புகிறது படப்பிடிப்பு. உதயநிதி பாண்ட் மாஸ்டராக நடிக்கிறார் இந்தப்படத்தில். நாளை முதல் உதயநிதி ஹன்ஸிகா காதல் காட்சிகளை படம் பிடிக்கிறேன் என்கிறார் ராஜேஷ். இதற்கு “ ஹன்ஸிகாவ கட்டிப்பிடிக்க தயாராயிட்டீங்களா பாஸ் என்று உதயநியிடம் போனைப் போட்டால் “ காலாய்ச்சுறாதீங்க பாஸ்! ராஜேஷ் பக்கத்துல இருந்தா எனக்கு ஒரு பயமும் இல்லை” என்று இயக்குனரின் மேல் நம்பிக்கையாகப் பேசுகிறார். சரி படத்தில் உங்கள் கதாபாத்திரன் பெயர் என்ன என்றால் “அதைச் சொன்னால் கதை என்ன என்று புரிந்து விடும். வேறு எதாவது கேளுங்கள் என்று உஷாரானார். சரி நீங்கள் பேசிய முதல் வசனம் என்னவென்று சொல்லுங்கள் என்றால் “ கோவிலில்தான் முதல் ஷாட் எடுத்தோம்! “ எல்லாம் நல்லபடியா நடக்கனும்” என்பதுதான் நான் பேசிய முதல் டயலாக் என்றார்.
அப்படிப் போடுங்க!
No comments:
Post a Comment