தமிழ் ஈழ தீவிர ஆதரவாளரான வைகோ அதிமுக கூட்டணியிலிருந்து வெளியேறி, தேர்தலையும் புறக்கணிப்பதாக அறிவித்துவிட்டார். அப்படியெனில் அவரால் அதிமுக கூட்டணிக்கு அழைத்து வரப்பட்ட மற்றொரு ஈழ ஆதரவாளரான நாம் தமிழர் கட்சி சீமானின் நிலை என்ன?
-வைகோ - அதிமுக உறவு முறிவுக்குப் பிறகு பலர் மனதிலும் எழுந்த இந்தக் கேள்விக்கு கடந்த ஒரு வார காலமாக பதிலே இல்லை. தொடர்ந்து அறிக்கை மேல் அறிக்கையாகத் தந்து கொண்டிருந்த சீமானும், திடீரென அமைதியாகிவிட்டார்.
என்னதான் செய்யப் போகிறார் சீமான்?
இந்தத் தேர்தலில் தனித்துப் போட்டியிடுகிறது சீமானின் கட்சி!!
ஈழ ஆதரவாளர்களின் ஓட்டு திமுக அல்லது அதிமுக அணிகளுக்குப் போவதைவிட, தங்களுக்கே கிடைக்க வேண்டும் என்ற நோக்கில் இந்தத் தேர்தலில் களமிறங்குகிறார் சீமான். தங்களுக்கு ஆதரவுள்ள தொகுதிகளைத் தேர்ந்தெடுத்து அவற்றில் வேட்பாளர்களை நிறுத்துகிறார் சீமான். இவை அனைத்தும் காங்கிரஸ் போட்டியிடும் தொகுதிகளாகவே இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
எத்தனை தொகுதிகளில் நிற்கிறார்கள், யார் வேட்பாளர், சீமான் போட்டியிடும் தொகுதி போன்ற தகவல்களை மட்டும் இன்று காலை 11 மணிக்கு மேல் அறிவிக்கிறார் சீமான்.
இந்த அறிவிப்பை வெளியிட்ட கையோடு தமிழகம் முழுவதும் சூறாவளி சுற்றுப் பயணத்தைத் தொடங்கும் சீமான், திமுக மற்றும் அதிமுக கூட்டணிகளுக்கெதிராக பிரச்சாரத்தை மேற்கொள்கிறார். குறிப்பாக காங்கிரஸ் போட்டியிடும் தொகுதிகளில் அவரது பிரச்சாரம் அமையும்படி திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.
சீமானின் இந்த புதிய முடிவு அதிமுகவுக்கு பெரும் அதிர்ச்சியாகவும் காங்கிரஸ் கட்சிக்கு தலைவலியாகவும் அமைந்துள்ளது. ஈழ ஆதரவாளர்களின் வாக்குகள் இருந்தால் போதும், ஆனால் அவர்கள் தம் கூட்டணியில் இருக்கக் கூடாது என்பது ஜெயலலிதாவின் எண்ணம். அந்த எண்ணம் புரிந்ததால்தான் அவரது கூட்டணியிலிருந்து விலகினார் வைகோ. இப்போது அவரது ஆதரவாளர்கள் யாருக்கு வாக்களிப்பது என்ற குழப்பத்துக்கு ஆளாகியுள்ளனர்.
இந்த நிலையில், வைகோ ஆதரவாளர்கள், தமிழ் ஈழ ஆர்வலர்கள், தமிழுணர்வாளர்கள் அனைவரும் நாம் தமிழர் கட்சிக்கு வாக்களிக்க வேண்டும் என்பது சீமானின் வேண்டுகோளாக உள்ளது.
இந்தத் தேர்தலில் காங்கிரஸை வீழ்த்துவதுதான் தமது பிரதான நோக்கம் என ஆரம்பத்திலிருந்தே கூறிவந்தார். அதிமுக அணியில் வைகோ இல்லாத நிலையில், இப்போது தனித்து நின்றே அந்த இலக்கினை அடைய முயன்றுள்ளார் சீமான். காங்கிரஸ் போட்டியிடும் அத்தனை தொகுதிகளிலும் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்களை நிறுத்துகிறார்.
"தமிழர்களைக் கொன்றழித்த காங்கிரஸ் வேட்பாளர்களைத் தோற்கடியுங்கள்" என்பதே சீமானின் பிரதான பிரச்சாரமாக இருக்கும் இந்தத் தேர்தலில்.

No comments:
Post a Comment