அதிமுக கூட்டணியில் இருந்து மதிமுக விலகியதால் எந்த பாதிப்பும் வராது என சமத்துவ மக்கள் கட்சித் தலைவரும் அக்கட்சியின் தென்காசி தொகுதி வேட்பாளருமான நடிகர் சரத்குமார் கூறினார்.
நேற்று பாவூர்சத்திரத்தில் உள்ள காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து தனது தேர்தல் பிரசாரத்தை துவங்கி பேசியதாவது,
தமிழகத்தில் அதிமுக சார்பில் அமைந்துள்ள கூட்டணியில் சமத்துவ மக்கள் கட்சிக்கு இரண்டு இடங்கள் கொடுத்த ஜெயலிலாதவுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த சரத்குமார சினிமாவில் நடிப்பாரே, தொகுதியில் இருப்பாரா, இல்லை வெற்றி பெற்று விட்டு தொகுதியை விட்டு சென்று விடுவாரா என்ற எதிர்தரப்பு கேள்விக்கு முதலில் நான் பதில் கூறுகிறேன்.
தென்காசி சட்டசபை தொகுதியில் உள்ள பொது மக்களுக்கு ஜாதி மத வேறுபாடின்றி அனைவருக்கும் பயன்படும் விதமாக 24 மணி நேரமும் செயல்படகூடிய தனிசெல் தொலைபேசி எண் இயங்கும். அந்த எண்ணில் நீங்கள் தொடர்பு கொண்டால் உங்களுக்கான எந்த பிரச்சனைக்கும் உங்களோடு நின்று வெற்றிகரமாக முடித்துத் தருவேன்.
உறதியாகவும், நிச்சயமாகவும் சொல்லிக் கொள்கிறேன், நான் வாரத்தில் நான்கு நாட்கள் தென்காசி தொகுதியில் தங்கியிருப்பேன். இந்க தொகுதியை தமிழகத்தின் சிறந்த தொகுதியாகவும், தொழில்வளம்,கல்வி வளம் நிறைந்த தொகுதியாகவும் அனைவரும் பாராட்டு விதத்தில் மாற்றிகாட்டுவேன்.
தமிழகத்தில் நடைபெற்று கொண்டிருக்கும் கருணாநிதியின் குடும்ப ஆட்சியையும், ஊழலையும், மணல் கொள்ளை ஆட்சியையும் கூண்டோடு ஓழித்து ஜெயலலிதாவின் தலைமையில் நல்லாட்சி அமைத்திட அனைவரும் இரட்டை இலைக்கு வாக்களியுங்கள் என்றார்.
சரத்குமார் பாவூர்சத்திரம் வந்தபோது அவருடைய மனைவி ராதிகாவும் வந்திருந்தார்.
பின்னர் இரவு 11.30 மணிக்கு ஐந்தருவி இசக்கி ரிசர்ட்டில் நிருபர்களுக்கு சரத்குமார் பேட்டியளித்தார். அவர் கூறுகையில், தேர்தல் வாக்குறுதிகளாக இலவச பொருட்களை அறிவித்துள்ளனர். தொடர்ந்து இலவசம் என்று அறிவித்து வருகின்றனர். இதனை நம்பி மககள் வாககளித்து ஏமாற மாட்டார்கள். ஓட்டு வங்கியை குறிவைத்து அரசியலை நடத்தி அறிவிப்புகளை வெளியிட்டு வருகின்றனர்.
லஞ்சம் கொடுப்பதற்கு சமம்தான் இலவசங்களை தருவதாக அறிவிப்பது. தேர்தல் ஆணையம் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். காமராஜர் பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வண்ணம் சிலர் அக்கட்சியின் பெயரை கள்ங்கப்படுத்தி வருகின்றனர். எங்கே இருக்கிறது அந்தக் கட்சி. அந்த கட்சி அனுமதி பெற்ற கட்சியா....தேர்தலில் வெற்றி தோல்வி என்பது ஜனநாயக முறை. அதை விடுத்து அவமானம் ஏற்படுத்த துடிப்பது நாகரீகம் அல்ல. அவர்கள் போட்டியிடும் சின்னத்தில்,தொகுதியில் வெற்றி பெறட்டு்ம். அதை விடுத்து என்னை தோற்கடிப்பேன், என்று மல்லுகட்டுகின்றனர். யாராக இருந்தாலும் முதுகில் குத்தாமல் நேருக்கு நேர் மோதி பார்க்கட்டும். அதுதான் வீரனுக்கு அழகு.
தொன்காசி தொகுதியில் 4 நாள் தங்கியிருந்து பணியாற்றுவேன். ச.ம.க. 3 மாதத்துக்கு முன்பே சர்வதிகார ஆட்சியை அகற்றிட வேண்டும் என்ற முடிவோடு கொள்கை,கூட்டணி பற்றி அறிவித்தது. அப்படிதான் தற்போது கூட்டணி அமைந்துள்ளது.
அதிமுக கூட்டணியில் இருந்து மதிமுக விலகியதால் எங்கள் அணிக்கு எந்த பாதிப்பும் வராது என்றார் சரத்குமார்.
No comments:
Post a Comment