சல்மான்கானின் வாழ்க்கை ரகசியங்களை அவரது பாடிகார்ட் ஷேரா புத்தகமாக வெளியிடப்போகிறார் என்று பாலிவுட்டில் பரபரப்பாக பேசப்படுகிறது. சக ஹீரோ, ஹீரோயின்களுடன் மோதல், நடிகைகளுடன் நெருங்கிய தொடர்பு, தாறுமாறாக கார் ஓட்டிச் சென்று ஒருவரை கொன்றது, மான் வேட்டை, தாதாக்களுடன் தொடர்பு என்று சல்மானை பற்றிய சர்ச்சைகளுக்கு பஞ்சமில்லை.
ஷேரா புத்தகம் எழுத ஆரம்பித்தால் சல்மானின் மற்ற வண்டவாளங்களும் அம்பலமாகிவிடும் என கூறப்படுகிறது. இது பற்றி சல்மான் கான் கூறியது: எனக்கு பாடிகார்டாக 15 வருடமாக ஷேரா இருக்கிறார். அவர் என்னுடைய வாழ்க்கை வரலாறு பற்றிய புத்தகம் எழுத மாட்டார் என்று கருதுகிறேன். அப்படி செய்துவிடக்கூடாது என்று கடவுளை வேண்டுகிறேன். அவரை முழுவதுமாக நம்புகிறேன்.
பண விவகாரம், குடும்பம் பற்றி மட்டுமல்ல, என் வாழ்வில் வந்து சென்ற பெண்கள் என எல்லா விஷயமும் அவருக்கு தெரியும். மது குடிப்பதற்கு முன்பும் சரி, குடித்த பிறகும் சரி நான் அவரைத்தான் நம்புவேன். எனக்கு மட்டுமல்ல, என் வாழ்வில் வந்து சென்ற அத்தனை பெண்களுக்கும் அவர்தான் பாடிகார்டாக இருந்திருக்கிறார்.
No comments:
Post a Comment