இங்கிலாந்தைச் சேர்ந்த மிகப் பிரபலமான பாடகி எமி ஒயின்ஹவுஸ் (27) அவரது வீட்டில் மர்மமான முறையில் பிணமாகக் கிடந்தார். அதிகளவில் போதை மருந்தை எடுத்துக் கொண்டதால் அவர் பலியாகியிருக்கலாம் என்று தெரிகிறது.
வடக்கு லண்டனில் உள்ள கேம்டன் சதுக்கத்தில் உள்ள தனது வீட்டில் இவர் நேற்று பிணமாகக் கிடந்தார்.
எமி ஒயின்ஹாசுக்கு போதை மருந்து மற்றும் மதுப் பழக்கம் இருந்தது. அதற்காக மறுவாழ்வு மையத்தில் தங்கி பலமுறை சிகிச்சை பெற்றுள்ளார்.
ஹவுஸ் பேக் டூ பிளாக், சோல் உள்ளிட்ட பாப் இசை ஆல்பங்கள் மூலம் புகழ் பெற்ற இவர் போதை பழக்கத்தால் சீரழிய ஆரம்பித்தார்.
இங்கிலாந்தின் கார்ன்வெல் நகரில் நடந்த இசை நிகழ்ச்சியின்போது, கடும் போதையில் பாடலையே மறந்துவிட்ட இவர், கூடியிருந்த ரசிகர்கள் மீது எச்சிலைத் துப்பிவிட்டு, இரும்பு மைக்கால் தன்னைத் தானே அடித்துக் கொண்டார். இன்னொரு நிகழ்ச்சியில் போதையில் தடுமாறி கீழே விழுந்தார்ய
இது போன்ற செயல்களால் ரசிகர்களின் ஆதரவை இழந்து வந்தார். இறுதியாக கடந்த மாதம் பெல்கிரேட் நகரில் ஒரு நிகழ்ச்சியில் பாடினார். ஆனால், அங்கும் போதை மருந்து உட்கொண்டு நிகழ்ச்சிக்கு வந்ததால் வாந்தி எடுத்தார், நிகழ்ச்சியில் முறையாகப் பாடவும் இல்லை.
இதைத் தொடர்ந்து அவரது அனைத்து நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்பட்டிருந்த நிலையில் நேற்று வீட்டில் பிணமாகக் கிடந்தார்.
10 வயதாக இருக்கும் போதே தனது நண்பர்களுடன் சேர்ந்து பாப் பாடல்கள் பாடி புகழ் பெற்ற இவர், பேக்டூ பிளாக் ஆல்பம் மூலம் உலகப் புகழ் பெற்றார். இந்த ஆல்பம் 5 கிரம்மி விருதுகளை வென்றது.
பிளேக் பீல்டர் என்பவர் உதவியோடு பாப் இசை உலகில் கால் வைத்த எமி, பின்னர் அவரை விட்டுப் பிரிவதும் சேருவதுமாக இருந்தார். அவரைப் பிரிந்தபோதெல்லாம் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டு, போதைக்கு அடிமையானார். பின்னர் இருவரும் திருமணமும் செய்து கொண்டனர்.
ஆனாலும், இவர்களிடையே நடுரோட்டில் கூட அடிதடி சண்டை நடந்து இருவருக்கும் ரத்தக் காயமும் ஏற்பட்டுள்ளது.

No comments:
Post a Comment