பொதுவாக தெலுங்கு சினிமா என்றாலே கரமசாலா ரசனை அதிகமாக இருக்கும். இந்நிலையில் 'தெய்வத்திருமகள்' நானா என்ற பெயரில் தெலுங்கில் வெளியாகியுள்ளது. ஆந்திரா ரசிகர்களின் கரமசாலா ரசனையை இந்தக் கலைப்படம் கவருமா என்ற சந்தேகம் அனைவருக்கும் இருந்தது. ஆச்சரியமாக சென்னையில் உள்ளது போன்றே ஹைதராபாத்திலும் படத்தை ரசிகர்கள் அமோகமாக வரவேற்றிருக்கிறார்கள். ஆந்திரா ரசிகர்கள் ஆக்சனை மட்டுமே ரசிப்பார்கள் என்பதை நானா - தெலுங்கில் அப்பா என்று பொருள் - உடைத்திருக்கிறது. விக்ரம், இயக்குனர் விஜய், அனுஷ்கா, குழந்தை சாரா என அனைவரும் ஹைதராபாத்தில் உள்ள திரையரங்குகளுக்கு சென்று ரசிகர்களுடன் உரையாடியிருக்கிறார்கள். ரசிகர்களின் வரவேற்பைப் பார்த்து விக்ரம் உள்ளிட்ட அனைவருக்கும் திருப்தி.
No comments:
Post a Comment