மண்ணின் மைந்தன் பாரதிராஜா தன் அடுத்த படைப்புக்கான பணியை ஆரம்பித்துவிட்டார்.
அவர் இயக்கத்தில் வெளியான லேட்டஸ்ட் படம் பொம்மலாட்டம். பாரதிராஜா என்ற அற்புதமான கலைஞன், இன்னும் ஜீவனும் துடிப்பும் கொண்ட படைப்பாளியாய் திகழ்வதை பறைசாற்றிய படம் அது.
இப்போது தனது அடுத்த படைப்பாக 'அன்னக்கொடியும் கொடிவீரனும்' படத்தை அறிவித்துள்ளார்.
இந்தப் படத்துக்கான கதை திரைக்கதை எழுதும் பணியை சமீபத்தில் நிறைவு செய்துவிட்ட பாரதிராஜா, தேனி, தென்காசி பகுதிகளில் படத்துக்காக லொகேஷன் பார்த்து வருகிறார்.
இந்தப் படத்தில் மீண்டும் தன் நண்பன் இசைஞானியுடன் கைகோர்க்கிறார் பாரதிராஜா. வைரமுத்துவும் இளையராஜாவும் இந்தப் படம் மூலம் மீண்டும் இணையவும் வாய்ப்பிருப்பதாகக் கூறப்படுகிறது.
இந்தப் படம் குறித்து பாரதிராஜா சமீபத்தில் கூறுகையில், "இந்தப் படம் இந்த பாரதிராஜாவின் இன்னொரு பரிமாணம். இன்றைய இயக்குநர்கள் பலர் என் படத்தை முன்னுதாரணமாகச் சொல்கிறார்கள். என்னை விட அற்புதமாக அவர்கள் சினிமா எடுத்தாலும், மரியாதை காரணமாக அப்படிச் சொல்வது எனக்குப் புரியாமலில்லை.
ஆனால் இப்போது நான் எடுக்கப்போகும் 'அன்னக் கொடியும் கொடி வீரனும்' படம், அடுத்த முப்பது வருடங்களுக்கு பேசப்படப் போகும் படமாக இருக்கும் என்பதை மட்டும் நான் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன்," என்றார்.

No comments:
Post a Comment