கேஜ்ரிவால், கிரண்பேடி, சிசோடியா உண்ணாவிரதம் இருக்கட்டும் நீங்கள் உண்ணாவிரதத்தை முடித்துக் கொள்ளுங்கள் என்று சிவ சேனா தலைவர் பால் தாக்கரே அன்னாவுக்கு வோண்டுகோள் விடுத்துள்ளார்.
ஊழலுக்கு எதிரான ஜன் லோக்பால் மசோதாவை எந்தவித திறுத்தமும் இன்றி அப்படியே நாடாளுமன்றத்தில் நிறைவேற்றக் கோரி அன்னா ஹஸாரே கடந்த 9 நாட்களாக டெல்லி ராம்லீலா மைதானத்தில் உண்ணாவிரதம் இருந்து வருகிறார். 74 வயதாகும் அவர் தொடர்ந்து உண்ணாவிரதம் இருந்து வருவதால் அவரது உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளது. மருத்துவமனையில் சேருமாறு மருத்துவர்கள் அறிவுறுத்தியும் ஏற்க மறுத்துவிட்டார்.
குளுகோஸாவது ஏற்றிக் கொள்ளுங்கள் என்று பிரதமர் மன்மோகன் சிங் கோரிக்கை விடுத்தார். அதற்கு உயிரை விட்டாலும் விடுவேன், குளுகோஸ் ஏற்றிக் கொள்ள மாட்டேன் என்று திட்டவட்டமாகத் தெரிவித்துவிட்டார். இந்நிலையில் உண்ணாவிரதத்தை முடித்துக் கொள்ளுமாறு அன்னாவுக்கு சிவ சேனா அமைப்பின் தலைவர் பால் தாக்கரே கடிதம் எழுதியுள்ளார்.
அதில் பால் தாக்கரே கூறியிருப்பதாவது,
உங்கள் உடல் நிலை பாதிக்கப்பட்டுள்ளதை கருத்தில் கொண்டு தயவு செய்து உண்ணாவிரதத்தை முடித்துக் கொள்ளுங்கள். கேஜ்ரிவால், கிரண்பேடி, சிசோடியா ஆகியோர் உண்ணாவிரதத்தை தொடரட்டும். 4-10-1996 அன்று பந்த்ராவில் உள்ள எனது வீட்டில் வைத்து என்னை சந்தித்து பேசினீர்கள். அப்போது நாம் ஊழலை எதிர்த்து எப்படி போராடுவது என்பது குறித்து ஆலோசனை நடத்தினோம்.
அதன் பிறகு நிருபர்களிடம் பேசிய நீங்கள், சிவ சேனா தலைவர் தான் இப்போதைக்கு இருக்கும் ஒரே நம்பிக்கை. அவரால் தான் ஊழலை ஒழிக்க முடியும் என்று கூறினீர்கள் என்று அதில் எழுதியுள்ளார்.
மேலும் அந்த கடிதத்தில் ஹஸாரேவின் போராட்டத்திற்கு நாட்டில் பெருகி வரும் ஆதரவு குறித்தும் பால் தாக்கரே எழுதியிருப்பதாக கட்சியின் தலைவரும், பால் தாக்கரேவின் மகனுமான உத்தவ் தாக்கரே தெரிவித்தார்.

No comments:
Post a Comment