நடிகர் சிரஞ்சீவி பிரசாரம் செய்த இடத்தில் தொண்டர்கள் தொடர்ந்து கோஷமிட்டதால் அதைக் கண்டித்தார் சிரஞ்சீவி. இதனால் ஆத்திரமடைந்த தொண்டர்கள், அவர் மீது சரமாரியாக செருப்புகளைக் கழற்றி வீசியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
ஆந்திராவில் 18 சட்டசபைத் தொகுதிகளுக்கும், ஒரு லோக்சபா தொகுதிக்கும் ஜூன் 12ம் தேதி இடைத் தேர்தல் நடைபெறுகிறது. இதில் வெற்றி பெற காங்கிரஸ் கடும் பிரயத்தனம் மேற்கொண்டுள்ளது.
தற்போதைய நிலையில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸே முன்னணியில் இருப்பதாக கூறப்படுகிறது.
நேற்று கர்னூல் மாவட்டம் எம்மிகலூரில் காங்கிரஸ் வேட்பாளரை ஆதரித்து நடிகர் சிரஞ்சீவி, ஆந்திர முதல்வர் கிரண்குமார் ரெட்டி ஆகியோர் திறந்த வேனில் சென்று பிரச்சாரம் செய்தனர்.
சிரஞ்சீவி பேசிக் கொண்டிருந்தபோது மைக் வேலை பார்க்கவில்லை. இதனால் அவர் பேசுவது தொண்டர்களுக்குக் கேட்கவில்லை. இதனால் தொண்டர்கள் கோஷமிட்டனர். சத்தமாக பேசுமாறு கோரின்.
இதனால் டென்ஷன் ஆன சிரஞ்சீவி, யாரும் கோஷம் போடக் கூடாது, சத்தம் போடக் கூடாது. சத்தம் போட்டால் நான் பேச மாட்டேன், போய் விடுவேன் என்றார்.
பேசுவது கேட்கவில்லை என்று கூறினால் நம்மையே மிரட்டுகிறாரே என்று கோபமடைந்த தொண்டர்களும், பெண்களும் காலில் போட்டிருந்த செருப்புகளை கழற்றி சரமாரியாக சிரஞ்சீவி மீ்து வீசியடித்தனர். ஏவுகணை போல செருப்புகள் தன் மீது வந்து விழுந்ததால் அதிர்ச்சி அடைந்த சிரஞ்சீவி செருப்புகளைத் தடுக்கப் பார்த்தார். முடியவி்ல்லை. சில செருப்புகள் ஆந்திர முதல்வர் மீதும் வந்து விழுந்தன.
இதையடுத்து பிரசாரம் நிறுத்தப்பட்டது. ஆந்திர முதல்வரும், சிரஞ்சீவியும் அங்கிருந்து தப்பி ஓடாத குறையாக கிளம்பிச் சென்றனர்.
No comments:
Post a Comment