இந்தியாவில் வரும் 26ம் தேதி குடியரசு தின விழா நடைபெறுகிறது. புதுடெல்லியில் நடைபெறும் குடியரசு தின விழாவில் அமெரிக்க அதிபர் ஒபாமா சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார்.
இதற்காக வரும் 24ம் தேதி ஒபாமா குடும்பத்தினர் புதுடெல்லி வருகின்றனர். இந்நிலையில், குடியரசு தின விழாவில் கலந்து கொள்ளும் ஒபாமாவுக்கும் அவரது மனைவி மிஷ்சேலுக்கும் பல்வேறு சிறப்பு பரிசுகளை வழங்க பிரதமர் மோடி திட்டமிட்டுள்ளார்.
ஒபாமாவுக்கு சால்வை மற்றும் துணிகளை மடித்து வைக்கக்கூடிய தீப்பெட்டி அளவில் உள்ள கைப்பையை பிரதமர் மோடி வழங்குகிறார். அதற்கான பணிகளை தெலங்கானா மாநிலத்தில் சிர்சிலா நகரை சேர்ந்த நல்லா விஜய் மேற்கொண்டு வருகிறார்.
அதேபோல், அவரது மனைவி மிஷ்சேலுக்கு பல்வேறு கலை வேலைப்பாடுகளுடன் கூடிய 100 பனாரஸ் புடவைகளை அன்பளிப்பாக வழங்குவதற்கு தேவையான பணிகள் வாரணாசியில் நடைபெற்று வருகிறது என்று வாரணாசி மாவட்ட மூத்த பாஜ தலைவர் கூறினார்.

No comments:
Post a Comment