டிசம்பர் 12-ம் தேதி உலகெங்கும் வெளியான ரஜினியின் லிங்கா படம் நல்ல வசூலுடன் இன்னும் ஓடிக் கொண்டுள்ளது.
அமெரிக்காவில் நூற்றுக்கும் அதிகமான அரங்குகளில் வெளியான இந்தப் படம் நான்காவது வாரமாக பல அரங்குகளில் தொடர்கிறது. லிங்கா படத்தை ரசிகர்கள் குடும்பம் குடும்பமாகப் பார்த்து ரசிக்கிறார்கள்.
ஆனால் சில பத்திரிகைகள் மற்றும் இணைய தளங்கள் வேண்டுமென்றே இந்தப் படத்துக்கு எதிர்மறையாக பிரச்சாரம் செய்வதாக ரஜினி ரசிகர்கள் மற்றும் விநியோகஸ்தர்கள் கருதுகிறார்கள்.
இதை உறுதிப்படுத்தும் விதத்தில் அமைந்துள்ளது லிங்கா வசூல். அமெரிக்காவில் ஒரு படம் நான்கு வாரங்கள் நல்ல வசூலுடன் தாக்குப் பிடிப்பது சாதாரண விஷயமல்ல. இதுவரை 1.6 மில்லியன் டாலர்களைக் குவித்துள்ள லிங்கா, இன்னும் பெருமளவு அரங்குகளில் ஓடிக் கொண்டுள்ளது.
அமெரிக்காவைப் பொறுத்தவரை இந்த ஆண்டின் மிகப்பெரிய வெற்றிப் படம் லிங்கா. பிகே போன்ற படங்கள்கூட அங்கு பெரிய வசூலை ஈட்டவில்லை. சமீபத்தில் கிறிஸ்துமஸுக்கு வெளியான நான்கு புதுப் படங்கள் கயல், கப்பல், மீகாமன் மற்றும் வெள்ளக்கார துரையைக் காட்டிலும் நல்ல வசூலுடன் லிங்கா ஓடுவதாக அமெரிக்க விநியோகஸ்தர் தெரிவித்துள்ளார்.
இந்தப் படங்களைக் காட்டிலும் அதிக காட்சிகளுடன் ஓடுகிறது லிங்கா. "ஏன் தொடர்ந்து லிங்காவுக்கு எதிராக தமிழ் மீடியாக்கள் எழுதி வருகின்றன என்று புரியவில்லை.
மக்கள் ரசித்துப் பார்க்கிறார்கள். வசூலும் நன்றாக இருக்கிறது. இதில் மீடியாவுக்கு என்ன பிரச்சினை? ஏன் லிங்காவை தொடர்ந்து விமர்சிக்கிறார்கள்?" என்று கேள்வி எழுப்பியுள்ளார் அந்த விநியோகஸ்தர்.
படத்தை வெளியிட்டுள்ள அட்மஸ் நிறுவனமும் இதே கேள்வியைக் கேட்கிறது.
மலேசியாவில்
லிங்காவுக்கு மலேசியாவில் அபரிமிதமான வரவேற்பு கிடைத்துள்ளது. இங்கு லிங்காவுக்கு இணையாக வெளியிடப்பட்ட பிகே படம், வசூலில் லிங்காவை நெருங்க முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:
Post a Comment