கனடாவின் சர்ரே நகரில் வசித்து வரும் பவுல்-மோரிஸ் தம்பதிக்குப் பிறந்த உலகின் மிகச் சிறிய குழந்தையான ஜெட் மோரிஸ் சமீபத்தில் தனது பெற்றோருடன் முதல் பிறந்த நாளைக் கொண்டாடியிருக்கிறான்.
எல்லா கர்ப்பிணிப் பெண்களையும் போலவே மோரிஸ், கருவுற்ற நாள் முதல் தன் குழந்தையைப் பற்றிய கனவுகளில் மிதந்து கொண்டிருந்தார். ஆனால், எதிர்பாராத விதமாக கருத்தரித்த 20 வாரத்திலேயே வயிற்று வலி ஏற்பட்டு கிழக்கு சர்ரே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் அவரது கர்ப்பப்பையிலிருந்த தண்ணீர் வெளியேறிவிட்டதாகவும் உடனடியாக கருக்கலைப்பு செய்ய வேண்டுமென்றும் மோரிஸை வற்புறுத்தினர்.
ஆனால், மோரிஸின் அன்பு கொண்ட தாயுள்ளமோ குழந்தையைக் கொல்ல பிடிவாதமாக மறுத்து விட்டது. அந்தப் பிடிவாதமும் அளவற்ற அன்பும்தான் கர்ப்பப் பையிலிருந்த தண்ணீர் வெளியேறிய போதும், ஐந்து வாரங்கள் கழித்து குழந்தையைப் பிரசவிக்க வைத்தது.
பிறந்த குழந்தையைப் பார்த்ததும் மோரிஸுக்கும் அவரது கணவர் பவுலுக்கும் பயங்கர ஆச்சர்யம். காரணம் பிறந்த குழந்தை பவுலின் கைக்குள் அடங்கும் அளவுக்கு சிறியதாக இருந்ததுதான். சுமார் 635 கிராம் எடை கொண்ட அந்த குழந்தைக்கு ஜெட் மோரிஸ் என்று பெயரிட்டு அன்புடன் வளர்க்கத் தொடங்கினர்.
பிறக்கும் போது குழந்தைக்கு மஞ்சள் காமாலை மற்றும் நுரையீரல் கோளாறு இருந்தாலும், சமீபத்தில் ஒரு வயது ஆகியுள்ள நிலையில், மோரிஸ் மிகவும் ஆரோக்கியமாக இருக்கிறான் என்றும் அவனது தாயார் மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

No comments:
Post a Comment