Wednesday, January 7, 2015

'என்னை அறிந்தால்' தள்ளிப் போனது ஏன்? ஏ.எம்.ரத்னம் விளக்கம்

அஜீத் நடித்த 'என்னை அறிந்தால்' படம் பொங்கல் விருந்தாக திரைக்கு வரும் என்று முதலில் அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்த படத்தின் வெளியிடும் தேதி தள்ளிப்போவதாக கடந்த 1-ந் தேதி திடீர் என்று தகவல் வெளியானது.

'என்னை அறிந்தால்' படத்தின் வெளியீடு தள்ளிப்போனது ஏன்? என்பது பற்றி பட அதிபர் ஏ.எம்.ரத்னம் விளக்கம் அளித்தார். அவர் கூறியதாவது:-

''என்னை அறிந்தால் படத்தின் பின்னணி இசை சேர்ப்பு, மிக்சிங் போன்ற பணிகள் நிறைவடையவில்லை. பட வேலைகளை அவசரம் அவசரமாக முடித்து  வெளியிட விரும்பவில்லை. எல்லா வேலைகளையும் நிதானமாக முடித்து, படத்தை 2 வாரங்கள் தள்ளி திரைக்கு கொண்டுவர முடிவு செய்யப்பட்டது. அதன்படி, படத்தின் வெளியீடு 29-ந் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டு இருக்கிறது.''

'என்னை அறிந்தால்' படத்தில், அஜீத் ஜோடிகளாக அனுஷ்கா, திரிஷா ஆகிய இருவரும் நடித்து இருக் கிறார்கள். எதிர்மறையான ஒரு வேடத்தில் அருண் விஜய் நடித்துள்ளார். 

நகைச்சுவை வேடத்தில், விவேக் நடித்து இருக்கிறார். ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார். கவுதம் வாசுதேவ் மேனன் டைரக்டு செய்து இருக்கிறார். எஸ்.ஐஸ்வர்யா தயாரித்து இருக்கிறார்.



No comments:

Post a Comment