இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கிடையேயான 4 ஆவது டெஸ்ட் போட்டியில் சதம் அடித்ததன் மூலம் 86 ஆண்டு கால சாதனையை விராட் கோலி சமன் செய்தார்.
இந்தியா– ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 4–வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி சிட்னியில் நடைபெற்று வருகிறது. ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 7 விக்கெட் இழப்புக்கு 572 ரன் குவித்து ‘டிக்ளேர்’ செய்தது.
விராட் கோலி 86 வருட கால சாதனையை சமன் செய்தார்
பின்னர் தனது முதல் இன்னிங்ஸை தொடங்கிய இந்திய அணி நேற்றைய 2 ஆவது நாள் ஆட்ட முடிவில் 1 விக்கெட் இழப்புக்கு 71 ரன் எடுத்து இருந்தது. லோகேஷ் ராகுல் 31 ரன்னும், ரோகித் சர்மா 40 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
இன்று தொடர்ந்து நடைபெற்ற 3 ஆவது நாள் ஆட்டத்தில் நிதான ஆட்டத்தை மேற்கொண்ட ரோகித் சர்மா 132 பந்துகளில் 5 பவுண்டரி, 2 சிக்சருடன் 50 ரன்னைத் தொட்டார். பின்னர் ரோகித் சர்மா 53 ரன்கள் எடுத்த போது ஆட்டமிழந்தார்.
அடுத்து லோகேஷ் ராகுலும், விராட் கோலியும் ஜோடி சேர்ந்தனர். இருவரும் அபாரமாக விளையாடி ஆஸ்திரேலியா பந்துவீச்சை திணறடித்தனர். கோலி 108 பந்துகளில் 9 பவுண்டரிகளுடன் 50 ரன்களை எடுத்தார்.
சதமடித்த லோகேஷ் ராகுல்..
மறுமுனையில் இருந்த ராகுல் சிறப்பாக விளையாடி சதம் அடித்தார். 253 பந்துகளில் 11 பவுண்டரி, 1 சிக்சருடன் 100 ரன்னை எடுத்தார். இவர் தனது 2 ஆவது டெஸ்டில் தனது முதல் சதத்தை பதிவு செய்தார். பின்னர் ராகுல் 110 ரன்கள் எடுத்து வெளியேறினார்.
இதனிடையே கேப்டன் விராட் கோலியும் அதிரடியாக விளையாடி சதத்தை கடந்தார். கோலி 162 பந்துகளில் தனது சதத்தை எட்டினார். கேப்டன் பொறுப்பேற்ற பின் கோலி அடிக்கும் மூன்றாவது சதம் இதுவாகும்.
மூன்றாம் நாள் ஆட்ட முடிவில் இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸில் 5 விக்கெட் இழப்பிற்கு 342 ரன்கள் எடுத்துள்ளது. விராட் கோலி 140 ரன்களுடனும், விருத்திமான் சஹா 14 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.
இந்தப் போட்டியில் விராட் கோலியின் சாதனைகள்:
அவர் இந்த தொடரில் அடித்துள்ள நான்காவது சதம் இதுவாகும். வெளிநாட்டு மண்ணில் நடந்த ஒரு டெஸ்ட் தொடரில் நான்கு சதம் அடித்த இந்திய வீரர் என்ற பெருமை சுனில் கவாஸ்கருக்கு மட்டுமே இருந்து வந்தது.
அதே நேரம் ஒரு வெளிநாட்டு வீரர் ஆஸ்திரேலிய மண்ணில் 86 வருடங்களுக்கு பிறகு ஒரே டெஸ்ட் தொடரில் 4 செஞ்சுரிகள் அடித்துள்ள சம்பவம் தற்போதுதான் நடந்துள்ளது.
மேலும், ஆஸ்திரேலியாவிற்கு எதிரான தொடரில் அதிக ரன்கள் குவித்தவர்களில் ராகுல் டிராவிட்டை முந்தினார். ராகுல் டிராவிட் கடந்த 2003 ஆம் ஆண்டு நடந்த டெஸ்ட் தொடரில் 4 போட்டிகளில் 619 ரன்கள் எடுத்திருந்தார். தற்போது விராட்கோலி, 4 சதத்துடன் 634 (தற்போதைய நிலவரப்படி) ரன்களுடன் முன்னிலை பெற்றுள்ளார்.

No comments:
Post a Comment