இந்த பேய் தான் என்னை பாலியல் பலாத்காரம் செய்து நாசம் செய்தது என்று உபேர் டாக்சி ஓட்டுநர் ஷிவ் குமாரைப் பார்த்து பாதிக்கப்பட்ட பெண் கதறியுள்ளார்.
உபேர் டாக்சி ஓட்டுநர் ஷிவ் குமார் டெல்லியை சேர்ந்த 27 வயது இளம் பெண்ணை வேலை முடிந்து திரும்பிய போது தனது காரிலேயே வைத்து கற்பழித்தார். நடந்ததை வெளியில் சொன்னால் கொலை செய்து விடுவேன் என்றும் மிரட்டல் விடுத்தார்.
பின்னர் தனது காரிலேயே அழைத்து சென்று அவரது வீட்டின் அருகில் இறக்கிவிட்டு தப்பிச் சென்றுவிட்டார். இதையடுத்து பாதிக்கப்பட்ட பெண் டெல்லி சாராய் ரோகில்லா காவல் நிலையத்தில் புகார் செய்தார்.
இதனால் உபேர் டிராவல்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான கார் ஓட்டுநர் ஷிவ் குமார் யாதவை கடந்த டிசம்பர் 7 ஆம் தேதி கைது செய்தனர். டெல்லி அரசு உபேர் டாக்சிகள் டெல்லி நகரில் இயங்க தடை விதித்தது.
இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் ஷிவ் குமாரை கைது செய்து 8 ஆம் தேதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இந்த வழக்கு டெல்லியில் உள்ள திஸ் ஹசாரி நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், கடந்த மாதம் 8 ஆம் தேதி பாதிக்கப்பட்ட பெண் வாக்குமூலம் அளிக்க திஸ் ஹசாரி நீதிமன்றத்திற்கு சென்றுள்ளார். அவர் அறை எண் 247ல் மாஜிஸ்திரேட் ரியா குஹா முன்பு வாக்குமூலம் அளித்துவிட்டு வெளியே வந்துள்ளார்.
அப்போது அறை எண் 264இல் இருந்து வெளியே வந்த ஷிவ் குமாரை பார்த்த அந்த பெண் இந்த பேய் தான் என்னை பாலியல் பலாத்காரம் செய்து நாசம் செய்தது என்று அலறியுள்ளார். சம்பவம் நடந்து 19 நாட்கள் கழித்து டிசம்பர் 24 ஆம் தேதி நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
100 பக்கங்கள் கொண்ட குற்றப் பத்திரிக்கையில் போலீசார் 44 சாட்சியங்களை குறிப்பிட்டுள்ளனர். குற்றப் பத்திரிக்கையில் அந்த பெண் ஷிவ் குமாரை பார்த்து அலறிய சம்பவம் பற்றியும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment