கோவையை அடுத்த கருமத்தம்பட்டியில் தனியாருக்கு சொந்தமான ஆசிரியர் பயிற்சி கல்லூரி உள்ளது. இங்கு 90–க்கும் மேற்பட்ட மாணவிகள் படித்து வருகிறார்கள்.
இவர்கள் இன்று காலை திடீரென்று கல்லூரி வாசலில் அமர்ந்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். கல்லூரியின் செயலாளர் எங்களிடம் தகாத வார்த்தைகளில் பேசுகிறார்.
அரை நிர்வாணமாக நின்று சைகை மூலம் பேசுவதோடு ஆபாச படங்களை காட்டி தகாத முறையில் நடக்க முயல்கிறார். அவரது கொடுமைகளால் மன உளைச்சலுக்கு ஆளாக்கப்பட்டுள்ளோம் என்று கூறினர்.
மேலும் சுற்றுலா சென்ற இடத்தில் 4 மாணவிகளை தவிக்க விட்டு விட்டு வந்து விட்டனர். இதுபோன்ற தகாத செயல்களில் ஈடுபட்டு வரும் கல்லூரியின் செயலாளரை உடனே மாற்ற வேண்டும். அதுவரை எங்கள் போராட்டம் ஓயாது என்று கோஷம் எழுப்பினர்.
தகவல் அறிந்ததும் கருமத்தம்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் சேகர் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அங்கு கல்லூரி முன்பு முற்றுகை போராடத்தில் ஈடுபட்ட மாணவிகளிடம் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர்.
அப்போது மாணவிகள் ‘செயலாளரை மாற்றும் வரை ஓயமாட்டோம்’ என்றனர். அதைத்தொடர்ந்து கல்லூரி நிர்வாகத்திடம் பேச்சுவார்த்தை நடந்தது.
அவர்கள் மாணவிகளின் கோரிக்கையை ஏற்று செயலாளரை இன்னும் 3 நாட்களில் மாற்றிவிடுகிறோம் என்றனர். ஆனால் நிர்வாகம் கூறிய சமாதானத்தை மாணவிகள் ஏற்கவில்லை. உடனே மாற்ற வேண்டும் என்றனர்.
எனவே தொடர்ந்து மாணவிகளிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. கல்லூரியின் செயலாளர் செக்ஸ் டார்ச்சர் தருவதாக கூறி மாணவிகள் நடத்திய முற்றுகை போராட்டம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

No comments:
Post a Comment