ராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரை நகராட்சி அதிமுக பெண் கவுன்சிலர் “மீனா” (42 வயது). இவர் மாதம் 1,200 ரூபாய்க்கு வீடுகளில் பாத்திரம் தேய்த்து வீட்டுவேளை பார்த்து வருகிறார்.
பொதுவாக அரசியலில் இருந்தால் பார்ப்பதற்கு தோரணையாக இருப்பார்கள். கார், பெரிய வீடு என வசதிவாய்ப்புடன் இருப்பார்கள். ஆனால் இவரோ ஓட்டுவீட்டில் வசித்து வருகிறார். இவரது கணவர் மூக்காண்டி கொத்தனார் பணி செய்து வருகிறார். இவர்களுக்கு மகன்.2 மகள் திருமணமாகிவிட்டது.
இவரது 2 வார்டு அருந்ததியினருக்கு ஒதுக்கப்பட்டது. தேர்தலில் நிற்க 500 ரூபாய் தான் டெபாசிட் தொகை. அதையும் கட்சியினர்தான் கட்டினர்.
அவர் கூறுகையில், "இரண்டு வீடுகளில் 20 வருடங்களாக சமையல் பாத்திரம் தேய்த்து துணி துவைக்கிறேன். இதற்கு மாதம் 600 ருபாய் காலை 5.30 மணிமுதல் 12.30 வரை வேலை பார்த்த பின் எனது வீட்டிற்கு சென்று சமையல் செய்வேன்.
அதுபோக நகராட்சி கூட்டத்தில் மக்களின் குறைகளை வலியுறுத்துவேன். என்னால் முடிந்த அளவு சேவை செய்து வருகிறேன். ஒரு சிலர் என்னை ஏளனமாக பார்த்தாலும் கண்டுகொள்வதில்லை. அதுமட்டுமில்லாமல் மற்றவர்களுக்காக வாழாமல் நமக்காக உழைத்து வாழவேண்டும்" என்றார்.

No comments:
Post a Comment