2 ஆஸ்கர் விருதுகளை வென்றுள்ள இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இந்த ஆண்டிற்கான ஆஸ்கர் விருதை வெல்வதற்கான பரிந்துரைப் பட்டியலில் இடம் பெறவில்லை.
87வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா அமெரிக்காவில் அடுத்த மாதம் நடைபெற இருக்கிறது. இதையொட்டி, விருதுகளுக்கான பரிந்துரைப் பட்டியல் இன்று வெளியானது. அவற்றில் 8 ஹாலிவுட் படங்கள் பரிந்துரைக்கப்பட்டன.
கோச்சடையான், த ஹண்ட்ரட் ஃபூட் ஜர்னி, மில்லியன் டாலர் ஆர்ம் ஆகிய 3 படங்களுக்காக பின்னணி இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானின் பெயர் ஆஸ்கர் பட்டியலில் இடம்பெறும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால். ஆஸ்கர் விருதுக்கான பரிந்துரைப் பட்டியலில் ரஹ்மானின் பெயர் இடம்பெறவில்லை.
இதன்மூலம், ஏற்கனவே 2 ஆஸ்கர் விருதுகளை பெற்றுள்ள ஏ.ஆர்.ரஹ்மான், இம்முறை ஆஸ்கர் விருது பெறுவதற்கு வாய்ப்பில்லை.
அதேநேரத்தில், பேர்ட்மேன், த கிரான்ட் புடாபெஸ்ட் ஹோட்டல் ஆகிய படங்கள், 9 பிரிவுகளில் ஆஸ்கர் விருதுக்கான பரிந்துரைப் பட்டியலில் இடம்பிடித்துள்ளன.
அதுபற்றி, ஏ.ஆர்.ரஹ்மான் கூறுகையில், 'நான் ஆஸ்கர் விருதை எதிர்பார்க்கவில்லை. கடவுள் எனக்கு நிறைய அன்பை கொடுத்திருக்கிறார். எனது நீண்ட கலைப்பயணத்தில் இது ஒரு ஸ்டாப் அவ்வளவுதான்' என்றார்.

No comments:
Post a Comment