அன்னக்கிளி படத்தின் மூலம் சினிமாவுக்கு வந்த இளையராஜாவுக்கு பாலாவின் தாரை தப்பட்டை ஆயிரமாவது படம்.
உலக சினிமா சரித்திரத்தில் ஆயிரம் படங்களுக்கு இசையமைத்த ஒரே இசை மேதை இளையராஜாதான்.
அவரது இசையில் வெளியான பாடல்களில் பெரும்பாலானவை சூப்பர்ஹிட்டானவை. இது இன்னொரு சாதனை.
பால்கியின் ஷமிதாப் படத்துக்கு இளையராஜா இசையமைத்துள்ளார். பால்கியின் மூன்று படங்களுக்கும் அவர்தான் இசை.
ஷமிதாப் பாடல்கள் வெளியீட்டை, ஆயிரம் திரைப்படங்களுக்கு இசையமைத்த இளையராஜாவுக்கான பாராட்டுவிழாவாக நடத்தினார் பால்கி.
மும்பையில் நடந்த இந்தவிழாவை முன்னின்று நடத்தியவர் அமிதாப்பச்சன். அவரது அழைப்பை ஏற்று கமல், ரஜினி, ஸ்ரீதேவி, அபிஷேக்பச்சன், ஐஸ்வர்யா ராய் போன்றவர்களும் விழாவில் கலந்து கொண்டு இளையராஜாவுக்கு பொன்னாடை போர்த்தி வாழ்த்து தெரிவித்தனர். அமிதாப்பச்சன் இளையராஜாவின் இசையில் ஒரு பாடலையும் பாடினார்.
தாரை தப்பட்டை இளையராஜாவின் ஆயிரமாவது படம் என்பதால் அதன் பாடல்கள் வெளியீட்டுவிழாவை இளையராஜாவின் பாராட்டுவிழாவாக மிகப்பிரமாண்டமாக எடுக்க பாலா திட்டமிட்டுள்ளார்.

No comments:
Post a Comment