செளதி அரேபிய மன்னர் அப்துல்லா பின் அப்துல் அஜிஸ் உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் காலமானார்.
அவருக்கு வயது 90. கடந்த சில மாதங்களாக நுரையீரல் தொற்று காரணமாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வந்தார்.
செயற்கை சுவாசத்தில் இருந்து வந்த அவர் இன்று அந் நாட்டு நேரப்படி (வெள்ளிக்கிழமை) அதிகாலை 1 மணி்க்கு காலமானார்.
இதையடுத்து அடுத்த மன்னராக, இப்போது இளவரசராக இருக்கும் சல்மான் பின் அப்துல் அஜிஸ் (வயது 79 ) முடி சூட்டப்பட உள்ளார்.
சல்மானுக்கு பதில் புதிய இளவரசராக முக்ரின் பொறுப்பேற்க உள்ளார். மன்னர் அப்துல்லா மரணத்துக்கு அமெரிக்க அதிபர் ஒபாமா உள்பட உலக நாடுகளின் தலைவர்கள் அனைவரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

No comments:
Post a Comment