தேவி ஸ்ரீபிரசாத் இசையமைப்பாளர் என்பதற்கும் மேலே. மேடையில் பாடுவார், ஆடுவார், பாடிக் கொண்டே ஆடுவார். நடிகைகளுடன் அதிகம் கிசுகிசுக்கப்பட்ட பெருமைக்குரியவரும் இவரே. தொடர்ந்து தனது இசையில் நடிகைகளுக்கு பாட வாய்ப்பு அளிப்பவரும் சாட்சாத் இவரேதான்.
சார்மியை காதலிக்கிறார் என்று தேவி ஸ்ரீபிரசாத் மீது ஒரு வதந்தி ரொம்ப நாளாக ஓடிக் கொண்டிருக்கிறது. அதனை மொத்தமாக மறுத்துள்ளார்.
நான் நடிகைகளோடு பழகுவது நட்பாகதான். அதற்கு மேல் எதுவும் கிடையாது. நடிகைகளுக்கு பாடுகிற திறமை இருக்கக் கூடாதா? அதை நான் பயன்படுத்திக் கொள்கிறேன். வாழ்க்கை சந்தோஷமாக போய்க் கொண்டிருக்கிறது. சந்தோஷம் போய்விடுமோ என்ற பயத்தில்தான் திருமணத்தைப் பற்றி யோசிக்கவில்லை என கூறியுள்ளார்.
தேவி ஸ்ரீபிரசாத்தின் ஸ்டேட்மெண்ட் சார்மிக்கு ஷாக்கிங்காகதான் இருக்கும்
No comments:
Post a Comment