மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜியின் மருமகன் அபிஷேக் பானர்ஜியின் கன்னத்தில் இளைஞர் ஒருவர் அறைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி.யான அபிஷேக் பானர்ஜி கிழக்கு மிட்னாபூர் மாவட்டம் சண்டிப்பூரில் நடந்த பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார்.
அப்போது இளைஞர் ஒருவர் ஆக்ரோஷத்துடன் மேடையில் ஏறி யாரும் எதிர்பார்க்காத வகையில், அபிஷேக் பானர்ஜியின் கன்னத்தில் 'பளார்' 'பளார்' என 2 முறை அறைந்தார்.
இதனால் அபிஷேக் நிலைகுலைந்தார். இந்த சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. பாதுகாப்பு குளறுபடியே இதற்குக் காரணம் என்றும் கூறப்படுகிறது. இளைஞர் தாக்கியதில் அபிஷேக் பானர்ஜியின் கன்னத்தில் காயம் ஏற்பட்டது.
பொதுக்கூட்ட மேடையில் தங்கள் கட்சி எம்.பியை கன்னத்தில் அறைந்ததால் திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அவர்கள் அந்த இளைஞரை சுற்றி வளைத்து அடித்து உதைத்தனர். அங்கு இருந்த பொது மக்களும் தாக்கினர். இதில் காயம் அடைந்த அந்த இளைஞர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். அவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
சாரதா நிதி நிறுவன மோசடியில் இருந்த தொடர்பு காரணமாகவே மம்தா பானர்ஜியின் மருமகன் உறவினருக்கு கன்னத்தில் அடி விழுந்ததாக கூறப்படுகிறது.

No comments:
Post a Comment