Tuesday, January 6, 2015

முதல்முறையாக 300 கோடிகளை வசூலித்த இந்தியப் படம் பிகே

இந்தியாவில் அதிகம் வசூல் செய்த படம் என்ற பெருமையை அமீர் கான் நடித்த பிகே கைப்பற்றியுள்ளது. அத்துடன், இந்தியாவில் 300 கோடிகளை தாண்டிய முதல் படம் என்ற பெருமையும் இதற்கு கிடைத்துள்ளது.

கடவுள் மறுப்பையும், மூட நம்பிக்கையையும் நையாண்டி செய்தும் இந்தப் படம் சாதாரண வசூலையே முதல்நாள் பெற்றது. படம் நன்றாக இருந்ததால் ரசிகர்கள் குடும்பம் குடும்பமாக திரையரங்குக்கு வந்தனர். வசூல் அதிகரித்தது. 

4 தினங்களில் 100 கோடியை கடந்த படம் 9 தினங்களில் 200 கோடியை தாண்டியது. 17 தினங்களில் 305.27 கோடிகளை வசூல் செய்து முதலிடத்தைப் பிடித்துள்ளது. இதுவரை இந்திய அளவில் அதிகம் வசூல் செய்த தூம் 3  (271.82) சாதனையை இப்படம் முறியடித்துள்ளது.

வெளிநாடுகளில் அதிகம் வசூல் செய்த இந்தியப் படங்களில் பிகே நான்காவது இடத்தில் உள்ளது.


No comments:

Post a Comment