Wednesday, January 14, 2015

என்னை அறிந்தால் படத்தில் இரண்டு கிளைமாக்ஸ்?

கவுதம் மேனன் தற்போது அஜீத்தை வைத்து என்னை அறிந்தால்’ படத்தை இயக்கியுள்ளார். இதில் அஜீத்துக்கு ஜோடியாக அனுஷ்கா மற்றும் திரிஷா நடித்துள்ளார்கள். மேலும் அருண் விஜய், விவேக் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள். ஹாரிஸ் இசையமைத்துள்ள இப்படத்திற்கு டான் மெகதூர் ஒளிப்பதிவை செய்துள்ளார்.

சமீபத்தில் இப்படத்தின் பாடல்கள் மற்றும் டீசர்கள் வெளியானது. இது ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பு பெற்று சாதனையும் படைத்து வருகிறது. அஜீத் ரசிகர்கள் மட்டும் இல்லாமல் அனைத்து தரப்பினரிடமும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படம் ஜனவரி 29-ம் தேதி வெளியாகவுள்ளது.

நாளுக்கு நாள் இப்படத்தை பற்றி சுவாரஸ்யமான செய்திகள் வந்த வண்ணம் உள்ளன. தற்போது இப்படத்திற்கு இரண்டு கிளைமாக்ஸ் வைத்திருப்பதாக செய்தி பரவி வருகிறது. கவுதம் மேனன் இயக்கிய ‘காக்க காக்க’  படத்தில் இரண்டு கிளைமாக்ஸ் வைத்திருந்தார். அதேபோல் சிம்பு-திரிஷா நடிப்பில் வெளியான ‘விண்ணைத்தாண்டி வருவாயா’ படத்திலும் இரண்டு கிளைமாக்ஸ் காட்சிகள் இடம் பெற்றதாம். அதே பாணியை ‘என்னை அறிந்தால்’ படத்திலும் பின்பற்றியிருப்பதாக கூறப்படுகிறது.


No comments:

Post a Comment