இலங்கை அதிபர் ராஜபக்சே இந்து மதத்தைச் சேர்ந்தவர் என பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா தடாலடியாகக் கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், ''ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி பெற்றுத் தருமாறு மதுரை சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த 600க்கும் மேற்பட்ட கிராம மக்கள் எங்கள் கட்சியின் தேசிய தலைவர் அமித் ஷா சென்னைக்கு வந்தபோது நேரில் சந்தித்து மனு கொடுத்துள்ளனர்.
ஜல்லிக்கட்டு வீரவிளையாட்டு என்று நீதிமன்றத்தில் வாதம் செய்யப்பட்டதால், ஜல்லிக்கட்டுக்கு தற்போது தடை விதிக்கப்பட்டுள்ளது. அது வீர விளையாட்டல்ல, பாரம்பரிய விளையாட்டு, பரம்பரியமான ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு மீண்டும் நீதிமன்றத்தில் வழக்கு தொடர தமிழக அரசு தவறிவிட்டது. ப்ளுகிராஸ் அமைப்பில் கிறிஸ்தவர்களின் ஆதிக்கம் அதிகமாக உள்ளது. அதனால்தான் இந்தத் தடை வந்தது. ஆனால் இந்த வாதத்தை முன் வைத்து சுப்பிரமணியன் சுவாமி மூலம் வழக்கு தொடர்ந்து, ஜல்லிக்கட்டிற்கான தடையை நீக்குவோம்.
தற்போது கருத்துக் கணிப்புகள் படி தமிழகத்தில் பாஜகவுக்கு 10 சதவீத ஓட்டுகள் உள்ளது. இது விரைவில் அதிகரிக்கும். கட்டாய மதமாற்றத்தை பாஜக எதிர்க்கிறது. மதமாற்றத் தடை சட்டத்தைக்கொண்டு வரும் போது அதை எதிர்கட்சிகள் ஆதரிக்க வேண்டும். கறுப்புப்பணம் முழுவதும் விரைவில் மீட்கப்படும். தேசிய நதிகளை இணைத்தால் நதிநீர் பிரச்சனைக்கு நிரந்தரத் தீர்வு கிடைக்கும் என்பதால் அதற்கான ஆய்வு பணிக்கு மத்திய பட்ஜெட்டில் ரூ.100 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் 1300 டி.எம்.சி. தண்ணீர் வீணாக கடலில் கலக்கிறது. அதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேகதாதுவில் கர்நாடக அரசு அணை கட்ட சுற்றுச்சூழல் அனுமதியை மத்திய அரசு கொடுக்கவில்லை. இதுகுறித்து மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் மத்திய நீர் வளத்துறை அமைச்சர் உமாபாரதியிடம் எடுத்து கூறியுள்ளார். நிச்சயம் அணை கட்டுவது தடுக்கப்படும். தமிழக மீனவர்கள் இலங்கை கடல் எல்லைக்குள் மீன்பிடிக்க செல்லக்கூடாது. ஆழ்கடல் மீன்பிடிப்பிற்கு மத்திய அரசு உரிய உதவி செய்யும். இலங்கையில் தமிழர்கள் பாதுகாப்பாக உள்ளனர். இலங்கை சிறைகளில் தற்போது தமிழகத்தை சேர்ந்த ஒரு மீனவர் கூட இல்லை.
இந்திய அரசியல் சட்டப்படி இலங்கை அதிபர் ராஜபக்சே இந்து மத்தை சேர்ந்தவர். ராஜீவ் காந்தி கொலைக்கு காரணமான பிரபாகரனுக்கு பிறந்த நாள் கொண்டாடுவதும், காந்தியை கொலை செய்த கோட்சேவுக்கு சிலை அமைப்பதும் இரண்டுமே கண்டிக்கத்தக்கது. ஜிகாதி பயங்கரவாதிகளைக் காட்டிலும், கம்யூனிஸ்ட்கள் மோசமான காட்டுமிராண்டிகள். அவர்கள் சித்தாந்த ரீதியாக விவாதிக்க முன்வரவேண்டும்'' என்றார்.

No comments:
Post a Comment