ஆசிரமத்தில் பணிபுரிந்து வந்த சங்கீதாவின் மரணத்திற்கு நித்தியானந்தா தான் காரணம் என்று அவரது தாயார் காவல் துறையினரிடம் புகார் அளித்துள்ளார்.
திருச்சி மாவட்டம் ராம்ஜி நகரைச் சேர்ந்த அர்ஜூனன், ஜான்சிராணி தமபதியனரின் மகள் சங்கீதா நித்யானந்தா. சங்கீதா 2004 ஆம் ஆண்டு முதல் ஆசிரமத்தில் நீண்ட நாட்களாக பணிபுரிந்து வந்தார். இவர் கடந்த மாதம் 28 ஆம் தேதி பெங்களூர் ஆசிரமத்தில் அவர் மரணம் அடைந்தார்.
சங்கீதா உடலை கடந்த 30–ந் தேதி திருச்சிக்கு கொண்டு வந்து பெற்றோர் அடக்கம் செய்தனர். அப்போது அவரது உடலில் காயங்கள் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இது பற்றி திருச்சி ராம்ஜி நகர் காவல் துறையினரிடம், சங்கீதாவின் உடலை தோண்டி எடுத்து மீண்டும் பிரேத பரிசோதனை செய்ய வேண்டும் என கூறி இருந்தனர்.
இதற்கு ராம்ஜி நகர் காவல் துறையினர் சங்கீதா இறந்தது பிடதியில், எனவே அங்கு சென்று புகார் செய்யும்படி கூறிவிட்டனர். இதனால் சங்கீதாவின் பெற்றோர் பெங்களூர் சென்றுள்ளனர். இது தொடர்பாக சங்கீதாவின் தாய் நித்யானந்தா மீது குற்றம் சாட்டியுள்ளார்.
சங்கீதாவின் தாயார் அந்த புகாரில், ”எனக்கு 3 மகள்கள். 3 ஆவதாக பிறந்தவள்தான் சங்கீதா. மகள்களில் ஒருவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் திடீரென மரணம் அடைந்து விட்டார்.
இதனால், மன அமைதிக்காக பிடதியில் உள்ள நித்யானந்தா ஆசிரமத்துக்கு சென்ற சங்கீதாவுக்கு வெளி நாடுகளில் இருந்து வரும் பணத்தை கண்காணிக்கும் பொறுப்பு வழங்கப்பட்டிருந்தது. இத்தனை ஆண்டுகளிலும் எந்தவித குற்றச்சாட்டும் அவள் மீது எழவில்லை.
இந்நிலையில், கடந்த 28 ஆம் தேதி அன்று நித்யானந்தா ஆசிரமத்தில் இருந்து போன் செய்து சங்கீதா இறந்து விட்டாள் என்று தெரிவித்தனர். அவள் மீது திருட்டு பட்டம் சுமத்தியதுடன், இருதய கோளாறு காரணமாகவே இறந்து விட்டாள் என்றும் கூறினர்.
எனது மகளின் சாவில் மர்மம் இருக்கிறது. அவளது மூக்கு மற்றும் வாயில் இருந்து ரத்தம் கொட்டி இருக்கிறது. எந்த நோயும் இல்லாமல் இருந்த சங்கீதா இருதய நோயால் இறந்து விட்டாள் என்று கூறுவதை நம்ப முடியவில்லை.
பிரேத பரிசோதனை கூடத்தில் சங்கீதாவின் உடலை எங்களிடம் சரியாக காட்டவில்லை. மர்மமான முறையில் ஒருவர் இறக்கும் போது, பிரேத பரிசோதனைக்கு முன்னர் கடைபிடிக்க வேண்டிய நடைமுறைகள் சங்கீதா விஷயத்தில் பின்பற்றப்படவில்லை. நித்யானந்தாவின் சீடர்களே கையெழுத்து போட்டுள்ளனர்.
எனது மகளின் சாவுக்கு நித்யானந்தா, நடிகை ரஞ்சிதா மற்றும் நித்யானந்தாவின் சீடரான சம்சானந்தா ஆகியோரே காரணம். எனவே சி.பி.சி.ஐ.டி. போன்ற தனி அமைப்புகள் மூலம் விசாரணை நடத்த வேண்டும். எனது மகளின் உடலை மீண்டும் பிரேத பரிசோதனை செய்ய வேண்டும்” என்று கூறியுள்ளார்.

No comments:
Post a Comment