தேர்தல் செலவு பயணத்தில் விலக்கு பெறும் நட்சத்திர பேச்சாளர்கள் பட்டியலில் பெயர் இல்லை என்பதால் ஜெயலலிதா, முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் ஸ்ரீரங்கத்தில் பிரசாரம் செய்வார்களா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சந்தீப் சக்சேனா அளித்த பேட்டி வருமாறு:-
ஸ்ரீரங்கம் தொகுதியில் இடைத்தேர்தல் பாதுகாப்பு பணிக்காக 10 கம்பெனி துணை ராணுவத்தினர் (சுமார் 650 வீரர்கள்) ஈடுபடுத்தப்படுவார்கள். பிரச்சினைக்குரிய வாக்குச்சாவடிகளை கண்டறியும் பணிகள் நடக்கிறது. அங்கு கூடுதலாக துணை ராணுவத்தினர் நியமிக்கப்படுவார்கள். தேர்தல் செலவீன பார்வையாளர் ஸ்ரீதரதோராவும், போலீஸ் பார்வையாளர் வினோத்குமாரும் அங்கு பணிகளைத் தொடங்கிவிட்டனர். முக்கிய காலகட்டத்தில் நானும் அங்கு செல்வேன். தேவைப்பட்டால் அனைத்து கட்சி கூட்டம் நடத்தப்படும்.
தி.மு.க. கூறிய புகார் (ஒரு வாக்காளரின் பெயர் பலமுறை இடம்பெறுவது) சரிபார்க்கப்பட்டது. இடைத்தேர்தலுக்கான அறிவிப்பாணை 19-ந் தேதி வெளியிடப்பட்டு விட்டதால் அதன் பிறகு பட்டியலை திருத்த முடியாது. ஆனால் வெவ்வேறிடங்களில் இடம்பெற்றிருக்கும் பெயர்களுக்கான பட்டியலை வாக்குச்சாவடி அளவில் தயாரித்து, அந்த வாக்காளரை மறுபடியும் வாக்குப்பதிவு செய்யாதபடி தடுப்போம்.
தேர்தல் நடத்தை விதிமுறைகள் சரியாக அமல்படுத்தப்படுவதை கண்காணித்து வருகிறோம். இதுவரை அதிகபட்சமாக ரூ.42 லட்சம் பணம் கைப்பற்றப்பட்டுள்ளது. கட்சி தலைவர்கள் மற்றும் நட்சத்திர பேச்சாளர்களுக்கு தேர்தல் பயண செலவில் விலக்கு அளிக்கப்பட்டு வருகிறது. அதன்படி 27-ந் தேதிக்குள் நட்சத்திர பேச்சாளர்களின் பட்டியலை கட்சிகள் கொடுத்தால், அவர்களது தேர்தல் பயண செலவு, அந்த கட்சி வேட்பாளரின் செலவு கணக்கில் சேராது. இதுவரை 138 நட்சத்திர பேச்சாளர்களின் பெயர்கள் தேர்தல் கமிஷனிடம் கொடுக்கப்பட்டுள்ளது.
அ.தி.மு.க., தி.மு.க. தரப்பில் தலா 40 நட்சத்திர பேச்சாளர்களின் பட்டியல் கொடுக்கப்பட்டது. மற்ற சில கட்சிகளும் நட்சத்திர பேச்சாளர்களின் பட்டியல் கொடுத்துள்ளது. நாளை ராஜ்பவனில் நடைபெறும் தேசிய வாக்காளர் தினத்தில் சிறப்பாக செயல்பட்ட 3 மாவட்ட தேர்தல் அதிகாரிகள், 3 தேர்தல் பதிவு அதிகாரிகள், வாக்குச்சாவடி அதிகாரி ஒருவர் ஆகியோருக்கு முதன்முறையாக பரிசு வழங்கப்படுகிறது. அனைவரும் வாக்கு பதிவு செய்ய முன்வர வேண்டும், வாக்களிக்கும்போது விதிகளுக்கு உட்பட்டு நடந்து கொள்வது ஆகியவை தொடர்பாக விழிப்புணர்வை ஏற்படுத்த உள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை விதிக்கப்பட்ட அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா ஜாமீன் பெற்று இருக்கிறார். அதன் பின்னர் அவர் கட்சி ரீதியான எந்த நிகழ்ச்சிகளிலும் பங்கேற்காமல் இருப்பதால் இடைத்தேர்தல் பிரசாரத்துக்கு செல்வாரா? என்ற கேள்வி நிலவுகிறது.
அ.தி.மு.க. தாக்கல் செய்த நட்சத்திர பேச்சாளர்களின் பட்டியலில் ஜெயலலிதா மற்றும் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரின் பெயர்கள் இடம்பெறவில்லை. இந்த பட்டியலில் இடம்பெறாத கட்சி தலைவர்கள் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டால் அந்த செலவும் வேட்பாளரின் தேர்தல் செலவு கணக்கில் சேர்க்கப்படும். எனவே ஜெயலலிதா தேர்தல் பிரசாரம் மேற்கொண்டால், அவரது பயண செலவு கட்சியின் வேட்பாளர் எஸ்.வளர்மதியின் தேர்தல் செலவு கணக்கில் சேரும்.

No comments:
Post a Comment