'கத்தி’ திரைப்படத்தின் கதை திருடப்பட்டதாக தொடரப்பட்ட வழக்கில் நடிகர் விஜய், இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ் உள்பட 5 பேரும் நீதிமன்றத்தில் ஆஜராக மீண்டும் சம்மன் அனுப்ப தஞ்சை மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி முகமது அலி உத்தரவிட்டார்.
திரைப்பட இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்த ‘கத்தி’ திரைப்படம் கடந்த ஆண்டு வெளியானது. இந்த திரைப்படத்தின் கதை, தான் இயக்கிய தாகபூமி என்ற குறும்படத்தின் கதை என்றும், தன்னுடைய கதையை இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் திருடிவிட்டதாகவும், அதற்கு நஷ்டஈடு கோரியும், வேறு எந்த மொழியிலும் கத்தி திரைப்படத்தை மொழியாக்கம் செய்ய தடை விதிக்க வேண்டும் என்றும் தஞ்சையை அடுத்த இளங்காடு கிராமத்தை சேர்ந்த அன்பு.ராஜசேகர் என்பவர் தஞ்சை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கில் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ், நடிகர் விஜய், தயாரிப்பாளர்கள் கருணாகரன், சுபாஷ்கரன், ஒளிப்பதிவாளர் ஜார்ஜ்வில்லியம் ஆகிய 5 பேரும் நேரில் ஆஜராக வேண்டும் என்று ஏற்கனவே சம்மன் அனுப்பப்பட்டு இருந்தது.
இந்தநிலையில் நேற்று இந்த வழக்கு நீதிபதி முகமதுஅலி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ், நடிகர் விஜய் உள்பட 5 பேரும் ஆஜராகவில்லை. இதையடுத்து இந்த வழக்கு விசாரணையை அடுத்த மாதம் 24-ந் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி முகமது அலி உத்தரவிட்டார்.
அன்றைய தினம் இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ், நடிகர் விஜய் உள்பட 5 பேரும் நேரில் ஆஜராக வேண்டும் என்று மீண்டும் சம்மன் அனுப்ப நீதிபதி உத்தரவு பிறப்பித்தார்.

No comments:
Post a Comment