ராஜபக்சே ஆட்சியின்போது அவருடைய மகன்கள் ஏராளமான பெண்களை கற்பழித்தனர் என்று புத்த மத அமைப்பு பரபரப்பு குற்றம் சாட்டி உள்ளது.
இலங்கையின் அதிபராக 10 ஆண்டுகள் பதவி வகித்தவர், மகிந்த ராஜபக்சே. அண்மையில் நடந்த அதிபர் தேர்தலில் அவர் படுதோல்வி கண்டார். ராஜபக்சே ஆட்சியில் அவருடைய சகோதரர்களில் ஒருவர் கோத்தபய ராணுவ மந்திரியாகவும், இன்னொரு சகோதரர் பசில் ராஜபக்சே பொருளாதார மேம்பாட்டு மந்திரியாகவும் பதவி வகித்தனர். ராஜபக்சே ஆட்சியில் இருந்தபோது இவர்களுடைய அதிகாரம் கொடி கட்டி பறந்தது.
இதேபோல் ராஜபக்சேயின் 3 மகன்களான நமல், யோஷிதா, ரோகிதா ஆகியோரும் தந்தையின் செல்வாக்கை பயன்படுத்தி பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டு வந்திருப்பது தற்போது தெரிய வந்துள்ளது. குறிப்பாக, இவர்கள் மூவரும் ஏராளமான பெண்களை வலுக்கட்டாயமாக கற்பழித்து இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்து உள்ளது.
இது பற்றி ஜாதிக ஹெல உறுமய என்னும் புத்த மத அமைப்பின் தேசிய அமைப்பாளர் நிஷாந்த வர்ணசிங்கே கொழும்பில் நிருபர்களிடம் கூறியதாவது:-
ராஜபக்சேயின் மூத்த மகன் நமல் ராஜபக்சே, தலைமையிலான நீலப்படை அணி நாட்டில் மாற்றுப்படையாக செயல்பட்டது. நீலப்படை அணியின் செயல்பாடுகள் தொடர்பாக அடுத்து வரும் வாரங்களில் சட்டபூர்வ நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
ராஜபக்சே மகன்களால் ஏராளமான பெண்கள் பாலியல் பலாத்காரம், துன்புறுத்துதலுக்கு உள்ளாகி இருக்கிறார்கள். இது தொடர்பாக பல்வேறு தகவல்கள் எங்களுக்கு கிடைத்து உள்ளன. இவர்களின் துஷ்பிரயோகங்களுக்கு உள்ளான இளம் பெண்களுக்கு பல்வேறு அரசு பதவிகள் வழங்கப்பட்டு அவர்கள் சமாதானம் செய்யப்பட்டு இருக்கிறார்கள்.
ராஜபக்சேயின் மகன்கள் மீதான குற்றச்செயல்கள் குறித்து நாங்கள் பல தகவல்களை திரட்டி வரும் அதே நேரத்தில் இன்னும் கூடுதல் தகவல்களை மக்களிடம் இருந்து எதிர்பார்க்கிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த நிலையில் ராஜபக்சேயின் தேர்தல் தோல்விக்கு பின்பு, அவருடைய சகோதரரும், முன்னாள் மந்திரியுமான பசில் ராஜபக்சே தனது மனைவியுடன் நேற்று அதிகாலை அமெரிக்காவின் லாஸ்ஏஞ்சல்ஸ் நகருக்கு விமானம் மூலம் புறப்பட்டுச் சென்றார்.
கொழும்பு சர்வதேச விமான நிலையத்தில் இருந்து துபாய் வழியாக அமெரிக்க சென்ற விமானத்தில் இருவரும் பயணித்ததாகவும், முக்கிய பிரமுகர்கள் செல்லும் வழியாக அவர்கள் சென்றதாகவும் இலங்கை விமான நிலையத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதேபோல், ராஜபக்சேயின் இளைய சகோதரரான டட்லி விமானம் மூலம் தாய்லாந்து தலைநகர் பாங்காக் சென்று உள்ளார். அமெரிக்காவில் வசிக்கும் டட்லி அதிபர் தேர்தல் நடக்கும் 2 வாரங்களுக்கு முன்பாகவே இலங்கை வந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:
Post a Comment