தன் வீட்டு வேலைக்காரனை, பக்கத்து வீட்டு டாக்டர் காய்கறி வாங்கி வரச்சொன்னதை தட்டிக் கேட்ட சினிமா துணை நடிகைக்கு சரமாரியாக அடி, உதை விழுந்தது. இதுதொடர்பாக ஸ்கேன் சென்டர் உரிமையாளர் உள்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர். வளசரவாக்கம் அடுத்த ஆழ்வார்திருநகர் காமராஜர் சாலையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசிப்பவர் சிந்து (30), சினிமா துணை நடிகை. இவர், ‘அங்காடி தெரு, பரதேசி, வேலூர் மாவட்டம்‘ உள்பட 50க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். தற்போது தொலைக்காட்சி தொடரிலும் நடித்து வருகிறார். இவரது வீட்டில் லாரன்ஸ் (22) என்ற வாலிபர் தங்கி வேலை செய்து வருகிறார்.
இவரது பக்கத்து வீட்டில் வசிப்பவர் டாக்டர் வந்தனா (38). இவரது கணவர் வெங்கடகிருஷ்ணன் (43), அதே பகுதியில் ஸ்கேன் சென்டர் நடத்தி வருகிறார். சிந்து வீட்டில் இல்லாத நேரத்தில் வந்தனா, லாரன்சை தனது வீட்டுக்கு தேவையான பொருட்கள் வாங்கிவர கடைக்கு அனுப்புவது உள்பட பல்வேறு வீட்டு வேலைகளை கொடுத்துள்ளார்.இந்நிலையில், நேற்று முன்தினம் மாலை சிந்து படப்பிடிப்பு முடிந்து வீட்டுக்கு சென்றார். அவரிடம், வந்தனா தன் வீட்டு வேலைகளை செய்யும்படி அடிக்கடி வற்புறுத்துவதாக லாரன்ஸ் கூறியுள்ளார். இதையடுத்து, வந்தனா வீட்டுக்கு சென்ற சிந்து, ‘எனது வீட்டில் வேலை செய்பவரை நீங்கள் எப்படி வேலை வாங்கலாம்‘ என தட்டிக்கேட்டார்.
இதை தொடர்ந்து, டாக்டர் வந்தனா தனது கணவர் வெங்கடகிருஷ்ணனுக்கு செல்போன் மூலம் சம்பவம் பற்றி கூறியுள்ளார். இதில் ஆத்திரமடைந்த அவர், ஸ்கேன் சென்டரில் வேலை பார்க்கும் ராஜா, சங்கர், பிரான்சிஸ், சவுந்தர், அகில் ஆகியோருடன் சிந்து வீட்டுக்கு சென்றார். அங்கு அவரிடம் தகராறு செய்தார். வாக்குவாதம் முற்றியதால் அவர்கள் சிந்து மற்றும் லாரன்சை சரமாரியாக அடித்து உதைத்தனர். அப்போது, அங்கு நிறைமாத கர்ப்பிணியான சிந்துவின் உறவினர் சரண்யா (27) என்பவர் அவர்களை தடுத்தார். அவரையும் அடித்து உதைத்தனர். இதில் 3 பேரும் படுகாயம் அடைந்தனர்.
எழும்பூரில் உள்ள தாய் சேய் நல மருத்துவமனையில் சரண்யா சிகிச்சை பெற்று வருகிறார். சிந்து, லாரன்ஸ் ஆகியோர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். இதுகுறித்து வளசரவாக்கம் போலீசில் சிந்து புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து, வெங்கடகிருஷ்ணன், ராஜா, சங்கர், பிரான்சிஸ் ஆகியோரை கைது செய்தனர்.

No comments:
Post a Comment