மீடியாக்களிடம் ஏன் தான் அதிகம் பேசுவதில்லை என்று விளக்கம் அளித்துள்ளார் ரஜினிகாந்த். பொது விழாக்களில் அல்லது சினிமா நிகழ்வுகளில் பங்கேற்கும்போதுதான் ரஜினி தனது கருத்துகளைப் பேசுகிறார். மீடியாக்களைச் சந்திப்பதை முடிந்த வரை தவிர்க்கிறார் என்று ரஜினி பற்றி ஒரு கருத்து நீண்ட காலமாக உள்ளது. அவரும் இதைப் பற்றி கவலைப்படுவதில்லை.
இந்த நிலையில் ஹைதராபாதில் அவரைச் சந்தித்த மீடியா செய்தியாளர்கள், ஏன் மீடியாவைத் தவிர்க்கிறீர்கள்? எதுவும் பேச மறுக்கிறீர்கள்? என்று கேள்வி எழுப்பினார்.
என்ன பேசுவது?
அதற்கு பதிலளித்த ரஜினி, "நான் பெரிதாக எதையும் சாதித்துவிட்டதாக நினைக்கவில்லை. எனவே எனக்கு மீடியாவிடம் எனன பேசுவதென்றும் தெரியவில்லை. இப்போது மட்டுமல்ல.. முன்பும் கூட நான் என்னைப் பற்றி எதுவும் பேசியதில்லை.
நிறைய சாதித்தவர்கள் அதைப் பற்றி நிறைய பேசுவார்கள். நான் அப்படி எதுவும் செய்துவிட்டதாக நினைக்கவில்லை. நான் பேசுவதை விட என் வேலை பேசப்பட வேண்டும் என்று நினைக்கிறேன்," என்றார்.
ரஜியின் பேட்டிக்காக நிறைய பத்திரிகைகள் நேரம் கேட்டு காத்திருக்கின்றன. ஒரு பத்திரிகைக்கு கொடுத்து இன்னொரு பத்திரிகைக்கு கொடுக்காமல் போனால் சங்கடம் நேருமே என நினைத்து யாருக்கும் பேட்டி தராமல் உள்ளார் ரஜினி.

No comments:
Post a Comment