Monday, January 19, 2015

உத்தமவில்லனும் ஆஸ்கர் விருதும்

கமல் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘உத்தமவில்லன்’. இப்படத்தை நடிகர் ரமேஷ் அரவிந்த் இயக்குகிறார். பூஜாகுமார், ஆண்ட்ரியா, நாசர் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இப்படத்தில் மறைந்த இயக்குனர் கே.பாலச்சந்தரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ஜிப்ரான் இசையமைத்துள்ளார். 

சமீபத்தில் ‘உத்தமவில்லன்’ படத்திற்கான இசைக் கோர்ப்பு பணிகளை லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடத்தி முடித்திருக்கின்றனர். இப்படத்திற்கு சவுண்ட் ரீ-ரிக்கார்டிங் மிக்சிங்கை செய்த கிரீக் மேன் என்பவர், தற்போது அறிவித்துள்ள ஆஸ்கர் விருதுக்கு தேர்வாகியிருக்கிறார். ‘விபிளாஸ்’ என்ற படத்திற்கு சவுண்ட் ரீ-ரிக்கார்டிங் மிக்சிங் செய்ததற்காக அவர் ஆஸ்கர் விருதுக்கு தேர்வாகியுள்ளார். அவருக்கு உத்தமவில்லன் படக்குழு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளது. 

‘உத்தமவில்லன்’ படத்தை திருப்பதி பிரதர்ஸ் நிறுவனமும், ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனமும் இணைந்து பிரம்மாண்டமாக தயாரித்துள்ளது. இப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.


No comments:

Post a Comment