Thursday, January 15, 2015

பாலியல் தொழிலாளிகளுக்கு பட்டம் வழங்கிய பல்கலைக்கழகம்

இந்திராகாந்தி தேசிய திறந்தநிலைப் பல்கலைக்கழகம் (இக்னோ) இதற்காக ரெட் லைட் ஏரியாவைத் தேடிச் சென்ற இந்திய செஞ்சிலுவை சங்கத்தின் உதவியுடன் அங்குள்ள 'கங்கா ஜமுனா' பகுதியில் வாழும் பாலியல் தொழிலாளர்களுக்கு கல்வியை வழங்க தயாராக இருப்பதாக உறுதியளித்தது.

சென்ற ஆண்டு இதே பகுதியில் இந்திய செஞ்சிலுவை சங்கமும், இக்னோவும் இணைந்து பாலியல் தொழிலாளர்களுக்கு ஆரோக்கியமாக வாழ்வது பற்றி கவுன்சிலிங் நடத்தியது. இந்நிலையில், இந்த ஆண்டு இக்னோ நடத்தும் பட்டப்படிப்பு ஆயத்த தேர்வில் முதல்முறையாக 9 பாலியல் தொழிலாளர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 

10 மற்றும் +2 படிக்காதவர்கள் நேரடியாக பட்டப்படிப்பில் சேர இக்னோவில் ஒரு ஆயத்த தேர்வு நடத்தப்படுகிறது. இந்த தேர்வில் பொது அறிவு வினாக்களும், எளிமையான தேர்வு பாடங்களிலிருந்தும் கேள்விகள் கேட்கப்படுகின்றன.

இதற்கு 18 வயது நிரம்பியதாக வயது சான்று இருக்க வேண்டும். மத்திய பிரதேசம், சத்தீஷ்கர், மகாராஷ்டிரா மாநிலங்களிலிருந்து வந்துள்ள 9 பாலியல் தொழிலாளர்களுக்கும் வேறெந்த ஆவணங்களும் இல்லை. அவர்களிடம் அண்மையில் எடுக்கப்பட்ட ஆதார் கார்டு மட்டுமே இருந்தன.

இக்னோவின் நாக்பூர் மையத்தின் இயக்குனர் சிவசுவுரூப், ரெட் கிராஸ் சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் ஹேமலதா பாண்டே ஆகியோர் பாலியல் தொழிலாளர்களும் படிக்க வேண்டும் என விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.

No comments:

Post a Comment