Friday, January 23, 2015

தெலுங்கு ஹீரோக்களை மிரள வைத்த ஐ


தெலுங்கின் முன்னணி ஹீரோக்கள் பவன் கல்யாண், வெங்கடேஷ் இணைந்து நடித்திருக்கும், கோபாலா கோபாலா வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்தி ஓ மை காட் படத்தின் ரீமேக்கான இதில் பரேஷ் ராவல் நடித்த நாயகன் வேடத்தில் வெங்கடேஷும், கடவுள் விஷ்ணுவாக கெஸ்ட் ரோலில் அக்ஷய் குமார் நடித்த வேடத்தில் பவன் கல்யாணும் நடித்துள்ளனர்.

இந்தப் படம் வெளியான முதல் வாரத்தில் 48 கோடிகளை வசூலித்தது.

இந்தப் படம் வெளியாகி நான்கு தினங்கள் கழிந்த பின்பே ஐ தெலுங்கு டப்பிங் வெளியானது. ஐ வெளியான முதல்நாளில் 10 கோடியை வசூலித்து தெலுங்கு திரையுலகை மிரள வைத்தது. ஐ படத்தின் ஓபனிங்கால் கோபாலா கோபாலா படத்தின் விநியோகஸ்தர்களும், திரையரங்கு உரிமையாளர்களும் கதிகலங்கிவிட்டனர் என்று ட்ரேட் அனலிஸ்ட் த்ரிநாத் கூறியுள்ளார்.

டப்பிங்பட சரித்திரத்தில் ஆந்திராவில் இவ்வளவு அதிகம் ஓபனிங்கை பெற்றிருப்பது ஐ படம் மட்டுமே என்கிறார் இவர்.

No comments:

Post a Comment