Friday, January 9, 2015

திருமண நிச்சயதார்த்த தேதியை அறிவித்தார் த்ரிஷா

த்ரிஷாவுக்கும், வருண் மணியனுக்கும் திருமணம் நடைபெற உள்ளது என்ற செய்தியை முதல் ஆளாக மறுத்த த்ரிஷா, தனது ட்விட்டரில் தனக்கும், வருண் மணியனுக்கும் வரும் ஜனவரி 23 -ஆம் தேதி திருமண நிச்சயதார்த்தம் நடக்கயிருப்பதாக தெரிவித்துள்ளார்.

எங்கள் இரு குடும்பங்கள் மட்டும் பங்குபெறும் தனிப்பட்ட நிகழ்வில் எனக்கும், வருணுக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடக்கயிருப்பதை என்னுடைய ரசிகர்கள், நண்பர்கள் மற்றும் மீடியாவுக்கு தெரியப்படுத்திக் கொள்கிறேன் என அந்த செய்தியில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், எங்கள் திருமண தேதியை நாங்களே இன்னும் முடிவு செய்யவில்லை. அதற்குள் நீங்களாகவே எதையும் பரப்பாதீர்கள். நான் சம்பந்தப்பட்ட விஷயங்களை எப்போதும் போல நானே உங்களுக்கு முதலில் தெரிவித்து விடுவேன் என குறிப்பிட்டுள்ளார்.

திருமணத்துக்குப் பிறகு நடிக்க விருப்பமில்லை என்ற தனது முந்தைய ட்வீட்டை த்ரிஷா மறுத்துள்ளார். சினிமாவுக்கு முழுக்குப் போடும் எண்ணம் தற்போதைக்கு இல்லை. இந்த வருடம் நான் நடித்த 4 படங்கள் வெளியாகவிருக்கின்றன. விரைவில் 2 புதிய படங்களில் நடிக்க ஒப்பந்தம் செய்யவிருக்கிறேன் என அவர் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment