செய்திகளை உடனுக்குடன் தங்கள் ஆதரவாளர்களுக்கு தெரிவிக்கும் வகையில் நாட்டின் பல்வேறு அரசியல் தலைவர்கள் சமூக வலைத்தளமான டுவிட்டரில் கணக்கு வைத்துள்ளனர். அந்த வரிசையில், பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாசும் டுவிட்டரில் இணைந்துள்ளார்.
இதுகுறித்து அக்கட்சியின் தலைமை அலுவலகம் சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கை வருமாறு:
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் டுவிட்டர் கணக்கு தொடங்கி உள்ளார். அவரது டுவிட்டர் கணக்கின் முகவரி @drramadoss ஆகும். டாக்டர் ராமதாசின் கீச்சு எனப்படும் டுவிட்டர் குறுஞ்செய்திகள், புகைப்படங்கள் உள்ளிட்டவை அவரது டுவிட்டர் கணக்கின் வழியாக அவ்வப்போது வெளியாகும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment