தமிழகத்தில் தீவிர மூளை காய்ச்சல் பாதிப்பு உள்ளதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாவட்டங்களில் விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ள மாநில அரசுக்கு மத்திய சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.
இது குறித்து மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தமிழகத்தில் மூளை காய்ச்சல், தீவிர மூளை காய்ச்சல் பாதிப்புகள் உள்ளன. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாவட்டங்களில் விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ள மாநில அரசுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், தமிழகத்தில் மாநில கேன்சர் இன்ஸ்டிடியூட் அமைப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதற்கான நிதி விரைவில் ஒதுக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
சில தினங்களுக்கு முன்னர், மத்திய அரசின் சுகாதார நலத்திட்டங்கள் குறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஜே.பி.நட்டா தமிழ்நாடு சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கருடன் ஆலோசனை நடத்தினார்.
இந்நிலையில், மூளை காய்ச்சல் தொடர்பான மறுஆய்வு கூட்டம் இம்மாதம் 7ஆம் தேதி டெல்லியில் நடைபெறவுள்ளது. இந்தமாநாட்டில், தமிழகம், உத்தரப் பிரதேசம், மேற்கு வங்கம், பீகார், அசாம் ஆகிய மாநிலங்களைச் தேசர்ந்த அமைச்சர்கள் பங்கேற்க உள்ளனர் என்பது குறிப்பித்தக்கது.
No comments:
Post a Comment