தனது மனைவி சுனந்தா புஷ்கர் விஷம் வைத்து கொலை செய்யப்பட்டுள்ளார் என்பதை அறிந்து அதிர்ச்சி அடைந்ததாக முன்னாள் மத்திய அமைச்சர் சசி தரூர் தெரிவித்துள்ளார்.
முன்னாள் மத்திய அமைச்சர் சசி தரூரின் மனைவி சுனந்தா புஷ்கர் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் 17ம் தேதி டெல்லியில் உள்ள லீலா ஹோட்டலில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.
அவர் தற்கொலை செய்திருக்கக்கூடும் என்று முதலில் நினைக்கப்பட்டது. இந்நிலையில் சுனந்தா விஷம் வைத்து கொலை செய்யப்பட்டுள்ளதாக டெல்லி போலீஸ் கமிஷனர் பஸ்ஸி இன்று தெரிவித்துள்ளார்.
இது குறித்து சசி தரூர் செய்தியாளர்களிடம் கூறுகையில்:
என் மனைவி சுனந்தா மரணம் குறித்து போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்துள்ளதை அறிந்து அதிர்ச்சி அடைந்தேன். என் மனைவியின் மரணத்தில் ஏதும் வில்லங்கம் இருக்காது என்று தான் நினைத்தோம்.
நாங்கள் விரிவான விசாரணையையே விரும்புகிறோம். இந்த வழக்கு விரிவாக விசாரிக்கப்படுவதை பார்க்க விரும்புகிறேன். போலீசாருக்கு தொடர்ந்து முழு ஒத்துழைப்பு அளிப்பேன். சுனந்தாவின் பிரேத பரிசோதனை அறிக்கையின் நகலை அளிக்குமாறு கேட்க உள்ளேன். மேலும் விசாரணை குறித்த விவரங்களையும் கேட்டு பெற உள்ளேன் என்றார்.

No comments:
Post a Comment