மகாத்மா காந்தியை படுகொலை செய்த கோட்சேவுக்கு அனைத்து மாவட்டங்களிலும் சிலைகள் அமைக்க வேண்டும் என்று இந்துத்துவ அமைப்புகள் புறப்பட்டிருக்கின்றன.
இதுபோன்ற நடவடிக்கைகள் சமூக நல்லிணக்கத்தை சீரழித்துவிடுவது மட்டுமல்லாமல், தேசத்துக்கே பெரும் அவமானமாகிவிடும் என்று கண்டிக்கின்றன மதச்சார்பற்ற அமைப்புகள். 10 ஆண்டுகால காங்கிரஸ் கட்சியின் தவறான கொள்கைகளாலும் செயல்பாடுகளாலும் துவண்டு கிடந்த இந்தியாவை தூக்கி நிறுத்துவார் என்ற நம்பிக்கையோடு நரேந்திர மோடிக்கு மக்கள் வாய்ப்பு வழங்கினர்.
ஆனால், இந்துத்துவ அமைப்புகள் தங்களின் மதவாத செயல்திட்டங்களை சுதந்திரமாக நிறைவேற்றுவதற்கு நரேந்திர மோடி தலைமையிலான அரசை பயன்படுத்தி வருவது மட்டும்தான் துரிதமாக நடக்கிறது.
இந்தியாவின் அடையாளமாக இந்து மதம்தான் இருக்க வேண்டும் என்று குரல் எழுப்பும் இந்துத்துவ அமைப்புகள், பல்வேறு மாநிலங்களில் கட்டாய மதமாற்றத்தைத் தீவிரப்படுத்தியுள்ளன.
நாதுராம் கோட்சேவுக்கு 'தேசபக்தர்’ என்ற முலாம் பூசுவதற்கான முயற்சியையும் அவர்கள் ஆரம்பித்துள்ளனர். நாடாளுமன்ற மக்களவையில் பேசிய பி.ஜே.பி உறுப்பினர் மஹராஜ், கோட்சேவை 'தேச பக்தர்’, 'தேசியவாதி’ என்று புகழ்ந்தார். இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியதை அடுத்து தமது கருத்தை அவர் திரும்பப் பெற்றுக்கொண்டார்.
உத்தரப்பிரதேசத்தின் மீரட் நகரில் இந்து மகாசபையின் தேசியத் தலைவர் சந்திர பிரகாஷ் கௌசிக், துணைத் தலைவர் ராஜீவ் ரஞ்சன் உள்ளிட்ட நிர்வாகிகள் குழு கோட்சேவுக்கு சிலை அமைக்கும் நடவடிக்கையைத் தொடங்கி உள்ளது.
அதற்கு ஆதரவாக தமிழகத்திலும் கூட்டம் நடத்தப்பட்டு, அனைத்து மாவட்டங்களிலும் கோட்சேவுக்கு சிலைகள் வைக்க வேண்டும் என்று சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. அதற்கு பா.ம.க நிறுவனர் ராமதாஸ், ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ உள்ளிட்ட தலைவர்கள் கண்டன அறிக்கைகள் வெளியிட்டுள்ளனர்.
இந்த நிலையில், இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜுன் சம்பத்திடம் பேசினோம். ''இந்து மகா சபைதான் இந்துக்களுக்காக தொடங்கப்பட்ட முதல் இயக்கம். மதன்மோகன் மாளவியா, வீர சாவர்க்கர் போன்றோர் வழிநடத்திய இயக்கம். அந்த வழிவந்த கோட்சே, காந்தியின் கருத்துகளால் ஈர்க்கப்பட்டு சுதந்திரத்துக்காகப் போராடினார்.
ஆனால், முஸ்லிம்கள் மீதான காந்தியின் தனிப்பட்ட பாசம் இந்த நாட்டை சூறையாட உதவியது. உதாரணமாக அவர்கள் கதர் அணியத் தேவையில்லை என்று சொன்னது, வந்தே மாதரம் என்ற முழக்கத்தை ஜின்னா ஏற்றுக்கொள்ளாதபோது 'அல்லாஹு அக்பரை’ சேர்த்துக்கொள்ளச் சொன்னது, குரான் படித்தது, நேரு, ஆஸாத் போன்ற பல தலைவர்கள் பிரிவினையை ஒப்புக்கொள்ளாத போதும், அவர்களுக்கு ஆதரவளித்தது.
அதனால், ஒரே நாளில் சுமார் 6 கோடி மக்கள் அகதிகளாக்கப்பட்டனர். பசுவதை தடுப்புச் சட்டத்தை முஸ்லிம்களுக்காக தளர்த்திக் கொள்ளச் சொன்னார். வெறும் 20 சதவிகிதம் இருக்கும் மக்களுக்கான 33 சதவிகித நாட்டை பிரித்துத் தரச்சொன்னார்.
அதன் பின்னும் முஸ்லிம்கள் சும்மா இருக்கவில்லை. காஷ்மீரை அபகரிப்பது, வங்காளத்தைப் கைப்பற்றுவது என முயற்சிகளை மேற்கொண்டனர். அப்போது எல்லாம் ஒரு வார்த்தைகூட காந்தி சொல்லவில்லை.
வகுப்புக்கலவரம், நவகாளி கலவரம் நடந்தபோது, மானபங்கப்படுத்தப்பட்ட பெண்களை இந்து இளைஞர்கள் திருமணம் செய்துகொள்ள முன்வரவேண்டும் என்று சொன்னாரே தவிர, முஸ்லிம்களை கண்டிக்கவேயில்லை. இந்துமுஸ்லிம் ஒற்றுமை என்ற போர்வைக்காக ஒரு நாட்டையே விலையாகக் கொடுக்கும் இமாலயத் தவறைச் செய்தார். இதுபோன்ற எண்ணற்ற அவரது கொள்கைக்குப் புறம்பான செயல்கள், கலவரம் பிரிவினையால் பாதிக்கப்பட்ட மக்களின் குமுறல்கள்தான் கோட்சேயின் மனதில் வெறுப்பை விதைத்தன.
மற்றவர்கள் சொல்வதுபோல இதில் ஆர்.எஸ்.எஸ் அமைப்புக்கோ மற்றவர்களுக்கோ எந்த சம்பந்தமும் இல்லை. இதையும் தனது வாக்குமூலத்தில் தெளிவாகக் குறிப்பிட்டார் கோட்சே. பிர்லா மாளிகையில் காந்தியை சுடும்போதுகூட அவரை வணங்கிவிட்டுதான் சுட்டார்.
தான் இதில் இருந்து தப்பிக்க முடியாது என்று தெரிந்தும், இனியும் காந்தி உயிருடன் இருந்தால் இந்தியாவின் நிலை மிகவும் மோசமாகி முஸ்லிம்கள் கைகளில் சென்றுவிடும் என்று எண்ணித்தான் காந்தியை கொலைசெய்தார்.
அந்த சமயத்தில் இந்து மகாசபை மக்களிடையே செல்வாக்கு பெற்றிருந்தது. காந்தி சுடப்படாமல் இருந்திருந்தால் அவர்கள் ஆட்சிக்கு வந்திருக்க முடியும். அந்த சந்தர்ப்பத்தை காந்தியின் பொருளாதார, சுதேசி கொள்கைகளில் ஈடுபாடு இல்லாத, ரஷ்ய சோஷலிசத்தை ஆதரித்த நேரு போன்ற காங்கிரஸ் தலைவர்கள் திட்டமிட்டு பயன்படுத்திக்கொண்டனர்.
நேதாஜி போன்ற தலைவர்களை ஓரம் கட்டிவிட்டு தங்களை ஸ்திரப்படுத்திக் கொண்டார்கள். அதன்பின் இந்து மகாசபை, ஆர்.எஸ்.எஸ் போன்றவை தடை செய்யப்பட்டு இப்போதுதான் மீண்டுள்ளன.
காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோதும் கோட்சே நினைவுதினம் கொண்டாடப்பட்டது. ஆனால், இது ஏதோ மோடி ஆட்சிக்கு வந்தபின் எழுச்சி பெற்றிருப்பதுபோல திராவிட, கம்யூனிஸ்ட் கட்சிகள் குற்றம்சாட்டுகின்றன. எல்லோரும் தங்கள் தலைவர்களுக்கு சிலை வைத்திருக்கிறார்கள்.
அதேபோல நாங்களும் வைத்துக்கொள்கிறோம். இதில் தவறேதும் இல்லை. கோட்சே தன்னுடைய வாக்குமூலத்திலேயே, 'எதிர்காலத்தில் வரலாற்றைப் பிழையின்றி யாராவது ஒருவர் எழுதினால், என் செயலை ஆராய்ந்து பார்த்து அதில் இருக்கும் உண்மைகளை நம் புதிய தலைமுறைக்குச் சொல்லட்டும்’ என்று சொல்லியிருக்கிறார். அதற்கான ஒரு விதைதான் இது' என்று முடித்தார் அர்ஜுன் சம்பத்.
திராவிடர் விடுதலைக்கழகத்தின் பொதுச்செயலாளர் விடுதலை ராசேந்திரனிடம் பேசினோம். ''இந்துத்துவா அமைப்புகள் இப்போது வெளிப்படையாக வந்துள்ளன. இந்து மகாசபைக்கும் ஆர்.எஸ்.எஸ் அமைப்புக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று அந்தத் தரப்பினர் சொல்லி வந்தாலும் ஆர்.எஸ்.எஸ்காரர்களின் கொள்கைகளைத் தோற்றுவித்த வீரசாவர்க்கர், இந்து மகாசபையில் பணியாற்றினார் என்று அந்தத் தரப்பினரே சொல்கிறார்கள். இந்துத்துவா அமைப்பினர் சந்தர்ப்பத்துக்கு ஏற்ப தங்களின் கருத்துகளை மாற்றிக்கொள்வதில் வல்லவர்கள்.
கோட்சேவுக்கு இதுநாள் வரை நினைவுதினம்தான் அனுசரித்து வந்தனர். மோடியின் ஆட்சியில் சிலை வைக்கிறேன் என்று கிளம்பிவிட்டார்கள். மத்திய அரசு இதை வேடிக்கை பார்த்துக்கொண்டிருப்பது சரியா? கோட்சேவுக்கு சிலை அமைக்கப்போவதாக புறப்படுபவர்களை கைதுசெய்து சிறையில் அடைத்திருக்க வேண்டாமா? தமிழகத்தில் ராஜீவ் காந்தி கொலையில் சம்பந்தப்பட்டவராகச் சொல்லப்படும் சிவராசனுக்கு சிலை வைக்கிறேன் என்று யாராவது சொன்னால், இதேபோல வேடிக்கைதான் பார்ப்பார்களா?
தாலிபன்கள்கூட தங்கள் செயலுக்கு நியாயம் வைத்திருக்கிறார்கள். காந்தியை கொலைசெய்த கோட்சேவுக்கு சிலை அமைக்கத் துடிப்பதன் மூலம், இந்த சமூகத்துக்கு இந்துத்துவா அமைப்புகள் என்ன செய்தியைச் சொல்ல விரும்புகின்றன? தலைவர்களுக்கு சிலைகள் அமைப்பதை வெறும் சடங்கு என்று மட்டுமே பார்த்துவிட முடியாது.
வருங்கால தலைமுறைக்கு பல முக்கிய பாடங்களைச் சொல்லவே சிலைகள் அமைக்கப்படுகின்றன. கோட்சேவுக்கு சிலை அமைப்பது இந்தியாவின் மதநல்லிணக்கத்துக்கு ஊறு விளைவித்துவிடும். இதுவும் ஒருவகை பயங்கரவாதம்தான். கோட்சேவுக்கு சிலை அமைக்கப்படுமானால், அதைவிட பெரிய தேசிய அவமானம் வேறு எதுவும் இருக்க முடியாது' என்றார்.
மகாத்மாவின் கொலையை நியாயப்படுத்தி பேசும் அளவுக்கு நாட்டின் நிலைமை மோசமாகப் போய்க் கொண்டிருக்கிறது!

No comments:
Post a Comment