Thursday, January 22, 2015

சமையல்காரருடன் டேட்டிங்..!


இலங்கை இளவரசி ஜாக்குலின் பெர்ணான்டசின் ஜாலி பேட்டி இது...

உங்களின் முதல் காதல்?

அந்தப் பையன் பெயர் ஞாபகமில்லை. நான் இரண்டாவது படிக்கும்போது சக மாணவனான அவன் மீது காதல் வயப்பட்டேன்.

நீங்கள் நடிகை ஆகியிராவிட்டால்?

ஆவணப்படத் தயாரிப்பாளராக ஆகியிருப்பேன்.

நீங்கள் சந்தோஷப்படும் விஷயம்?

என்னால் நிறையப் பயணங்கள் மேற்கொள்ள முடிகிறது.

இலங்கை, கனடா, பக்ரைன், ஆஸ்திரேலியா என்று நீங்கள் வசித்த பல நாடுகள், தற்போது வசிக்கும் இந்தியா... இவற்றில் எது பிடிக்கும்?

இலங்கை. காரணம், எனது குடும்பம் அங்கே இருக்கிறது. ஆனால் தற்போது இந்தியாவும் எனது இரண்டாவது தாயகமாகிவிட்டது.

மாடலிங், சினிமா... இரண்டில் எளிது எது?

எனக்கு நடிப்பில் அதிக ஆர்வம் இருப்பதால், அது எளிதாகத் தோன்றுகிறது.

ஒரு வெளிநாட்டுக்காரராக, பாலிவுட்டில் எது உங்களுக்குக் கஷ்டமாக இருக்கிறது?

இந்தி சரளமாக பேச முடியாதது. 

5 ஆயிரம் முறை உட்கார்ந்து எழும் பயிற்சி செய்வதாக சமீபத்தில் ‘டுவீட்’ செய்திருந்தீர்கள். அது உண்மைதானா?

அது சும்மா ஜோக்!

நீங்கள் உங்கள் உடம்பின் ஒரு பகுதியை காப்பீடு செய்வதாக இருந்தால் எந்தப் பகுதியைக் காப்பீடு செய்வீர்கள்?

எனது கண் புருவங்களை.

உங்கள் டைரி, வாட்ஸ்அப் உரையாடல், விருப்பமான பாடல் வரிசை... இவற்றில் எதை வெளியே பட்டவர்த்தனமாகக் காட்ட சங்கடப்படுவீர்கள்?

நான் விரும்பிக் கேட்கும் பாடல்கள் பட்டியலை.

ஒரு தலைமை  சமையல்காரர், கணித நிபுணர், ஒரு நாட்டின் தலைவர், இந்தி நடிகர்... இவர்களில் யாருடன் டேட்டிங் செல்வீர்கள்?

தலைமை சமையல்காரருடன். 

எந்த உணவைப் பார்த்தால் உங்களால் சாப்பிடாமல் இருக்க முடியாது?

பால்சாதம்.

உங்களுடன் டேட்டிங் வரும் ஒரு நபருக்கு அவசியமான மூன்று விஷயங்கள்?

அவருக்கு சாப்பாட்டு மேஜை நாகரிகம் தெரிந்திருக்க வேண்டும், நல்ல நகைச்சுவை உணர்வு இருக்க வேண்டும். பெருந்தன்மை உடையவராக இருக்க வேண்டும்.

நீங்கள் பைத்தியமாக இருக்கும் ஒரு விஷயம்?

சுத்தம்.

நீங்கள் நள்ளிரவிலும் தொடர்பு கொள்ளக்கூடிய நபர்?

நள்ளிரவில் நான் நல்ல தூக்கத்தில் இருப்பேன்.

நீங்கள் உங்களை ‘ரிலாக்ஸ்’ செய்துகொள்ளும் விதம்?


சமையல் செய்வதன் மூலம்.

உங்களுக்கு 14 வயதாக இருந்தபோது யாராவது ஒருவர் உங்களுக்குக் கூறிய அறிவுரை?

உனது வாழ்க்கைக் கனவுகளை மனதார ஏற்க பயப்படாதே.

உங்கள் வாழ்வில் பெருமைப்படும் விஷயம்?

‘மிஸ் இலங்கை’ பட்டம் பெற்றதை.

உங்கள் வாழ்வில் கஷ்டமான நேரம்?

எனது இரண்டு படங்கள் வெளியான பிறகும், இரண்டாண்டுகளுக்கு எந்த வாய்ப்பும் இல்லாமல் இந்தியாவில் இருந்தது.

நீங்கள் பாலிவுட்டில் இணைந்து நடிக்கத் துடிக்கும் நடிகர்?

உங்களுக்கே தெரியும். நான் ஏற்கனவே அந்த நடிகருடன் நடித்துவிட்டேன்.

உங்களுக்குப் பிடித்த நவீன சாதனம்?

ஒரு சமையலறை சாதனம் அது. காய்கறிகளில் உள்ள நீர்ச்சத்தை நீக்கி சிப்ஸ் ஆக மாற்றுவது.

நீங்கள் ஜிம்முக்கு போகும்போது தவறாமல் எடுத்துச் செல்வது?

எனது வாட்டர் பாட்டிலை.

ஜாக்குலினைப் பற்றி வெளியே தெரியாத ரகசியம்?

நான் எதையும் எப்போதும் மறைத்ததில்லைNo comments:

Post a Comment