தமிழ்நாட்டில் கடந்த 2006-ம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் தி.மு.க, அ.தி.மு.க. ஆகிய கட்சிகள் கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்தன. விஜயகாந்தின் தே.மு.தி.க. முதல் முறையாக அனைத்து தொகுதிகளிலும் தன்னந்தனியே களம் இறங்கியது. இதனால் அந்த தேர்தலில் மும்முனைப் போட்டி நிலவியது.
இந்த தேர்தலின் போது, மொத்தம் உள்ள 234 தொகுதிகளுக்கு 3,902 வேட்பாளர்கள் போட்டியிட விருப்பம் தெரிவித்து மனு தாக்கல் செய்திருந்தனர்.
இதில் 189 பொது தொகுதிகளில் 2,979 ஆண்களும், 292 பெண்களும் என 2,271 பேர் வேட்புமனு தாக்கல் செய்தார்கள். 42 எஸ்.சி. தொகுதிகளில் 488 ஆண்களும், 102 பெண்களும், 3 எஸ்.டி. தொகுதிகளில் 33 ஆண்களும், 8 பெண்களும் என மொத்தம் 3,902 வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
இவற்றில் பொது தொகுதிகளில் 710 ஆண் வேட்பாளர்களின் மனுக்களும், பெண்களில் 143 மனுக்களும் தள்ளுபடி செய்யப்பட்டன.
எஸ்.சி. தொகுதியில் போட்டியிட விருப்பம் தெரிவித்த ஆண்களில் 113 மனுக்களும், பெண்களில் 44 மனுக்களும், எஸ்.டி. தொகுதி சார்பில் மனு அளித்த ஆண்களில் 12 பேரின் மனுக்களும், பெண் வேட்பாளர்களின் 3 மனுக்களும் என 1025 பேரின் வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டன.
தேர்தலில் போட்டியிட விருப்பம் தெரிவித்து மனு அளித்திருந்தவர்களில் 291 பேர் தங்களுடைய வேட்பு மனுக்களை திரும்ப பெற்றுக்கொண்டனர்.
இதில் பொது தொகுதிகளில் இருந்து 199 ஆண்கள் மற்றும் 43 பெண்களின் மனுக்கள் திரும்ப பெறப்பட்டன. இதே போன்று, எஸ்.சி. தொகுதியில் போட்டியிட விருப்பம் தெரிவித்த 34 ஆண்களும், 13 பெண்களும், எஸ்.டி. தொகுதி சார்பில் மனு அளித்த 2 ஆண்களும் என மொத்தம் 291 பேர் தங்களுடைய வேட்பு மனுக்களை வாபஸ் வாங்கிக்கொண்டனர்.
இதையடுத்து, தமிழக சட்டப்பேரவை தேர்தலில், மொத்தம் உள்ள 234 தொகுதிகளில் 2586 பேர் தேர்தலில் போட்டியிட்டனர்.
இவர்களில் பொது தொகுதிகளில் போட்டியிட்டவர்களில் 2070 ஆண்களும், 106 பெண்களும் அடங்குவர். எஸ்.சி. தொகுதிகளில் 341 ஆண்களும், 45 பெண்களும், எஸ்.டி. தொகுதியில் 19 ஆண்களும், 5 பெண்களும் தேர்தலை சந்தித்தார்கள்.
இவர்களில் பெரும்பாலானோர் குறிப்பிட்ட அளவு வாக்கு எண்ணிக்கையை பெற முடியாமல் தங்களுடைய டெபாசிட் தொகையை இழந்தார்கள்.
பொது தொகுதிகளில் 1705 ஆண் வேட்பாளர்களும், 80 பெண் வேட்பாளர்களும், டெபாசிட் தொகையை இழக்க நேரிட்டது. மேலும், எஸ்.சி. தொகுதிகளில் போட்டியிட்ட 272 ஆண் வேட்பாளர்களும், 27 பெண் வேட்பாளர்களும், எஸ்.டி. தொகுதியில் 15 ஆண் வேட்பாளர்களும், 3 பெண் வேட்பாளர்களும் என மொத்தம் 2102 பேர் டெபாசிட் இழந்தனர்.
No comments:
Post a Comment