மக்கள் ஜனாதிபதி' என்று அழைக்கப்பட்ட இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதி, டாக்டர் அப்துல்கலாம். அவருடைய கல்வி ஆலோசகராக இருந்த டாக்டர் முகமது அலாவுதீன் (80) என்பவர் நேற்று முன்தினம் மரணம் அடைந்தார்.
இந்த தகவல், தவறுதலாக அப்துல் கலாம் மரணம் அடைந்ததாக, இணைய தளங்கள் மூலம் பரவியது.
அதைத்தொடர்ந்து பல்வேறு பிரபலங்கள் உள்பட பலர் அனுதாப செய்திகளையும் வெளியிட தொடங்கினார்கள். தமிழ்நாட்டில் சேலம் உள்பட சில முக்கிய நகரங்களிலும் நேற்று இந்த தகவல் செல்போன் எஸ்.எம்.எஸ். மூலம் பரவியது.
பத்திரிகை அலுவலகங்களுக்கு பலர் நேரிலும், டெலிபோன் மூலமாகவும் தொடர்பு கொண்டு அதுகுறித்து விசாரிக்க தொடங்கினார்கள்.
ஆனால், அப்துல்கலாம் பற்றி வெளியான தகவல் உண்மையல்ல என்று இணைய தளங்களில் மீண்டும் அறிவிப்பு வந்ததை தொடர்ந்து அந்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.
அனுதாப செய்திகளை வெளியிட்டு இருந்தவர்களும், அதற்காக வருந்தி மன்னிப்பு கேட்டுக்கொள்வதாக இணைய தளம் மூலம் அறிவித்தனர்.
No comments:
Post a Comment