தேமுதிக ஆரம்பிக்கப்பட்ட பிறகு, மக்களிடமும் கடவுளிடமும் மட்டும்தான் கூட்டணி என்றும், தேமுதிக எந்த கட்சியுடனும் கூட்டணி வைக்காது என்றும் சொன்ன விஜயகாந்த், முதல் முறையாக கடந்த 2006ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில், விருத்தாசலம் தொகுதியில் பாமக வேட்பாளரை எதிர்த்து போட்டியிட்டு வெற்றி பெற்றார். மற்ற அனைத்து தொகுதிகளிலும் தேமுதிக தோல்வி அடைந்தது.
தற்போது நடைபெவுள்ள சட்டமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் தேமுதிக இடம்பெற்றுள்ளது. தேமுதிகவுக்கு 41 தொகுதிகள் ஒதுக்கப்பட்டது. அதில் உளுந்தூர்பேட்டையில் போட்டியிட விஜயகாந்த் விரும்பினார். ஆனால் அதிமுக அதில் போட்டியிட விரும்பியதால், பல சுற்று பேச்சுவார்த்தை நடைபெற்றும் உளுந்தூர்பேட்டை தொகுதி தேமுதிகவுக்கு ஒதுக்கப்படவில்லை.
இதையடுத்து ரிஷிவந்தியம் தொகுதியில் போட்டியிட முடிவு செய்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் 24.03.2011 அன்று வேட்புமனுத் தாக்கல் செய்தார்.
விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தேர்தல் அதிகாரியிடம், 24.03.2011 அன்று மதியம் அவர் தனது மனுவைத் தாக்கல் செய்தார். அவரது மனைவி பிரேமலதா விஜயகாந்த் மற்றும் தேமுதிக நிர்வாகிகள் உடன் வந்திருந்தனர்.
ரிஷிவந்தியம் தொகுதியில் திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ் கட்சி போட்டியிடுகிறது. காங்கிரஸ் கட்சி வேட்பாளராக போட்டியிடும் சிவராஜ், இதே தொகுதியில் ஏற்கனவே ஐந்து முறை போட்டியிட்டு நான்கு முறை வெற்றி பெற்றுள்ளார். தற்போது ஆறாவது முறையாக ரிஷிவந்தியம் தொகுதியில் சிவராஜ் போட்டியிடுகிறார்.
தனிப்பட்ட செல்வாக்குடன் சிவராஜ் போட்டியிடுவதால், தேமுதிகவுக்கும் காங்கிரசுக்கும் பலத்த போட்டி இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
No comments:
Post a Comment