மிஷ்கின் இயக்குவதாக இருந்த பாலிவுட் படம் இப்போது தொடங்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
யுத்தம் செய் படத்துக்குப் பிறகு பிரபல நிறுவனம் ஒன்றிற்காக இந்திப் படம் ஒன்றை இயக்கத் திட்டமிட்டிருந்தார் மிஷ்கின். ஜான் ஆபிரகாம் இதில் ஹீரோவாக நடிக்கவிருந்தார். இந்திய - பாகிஸ்தான் எல்லைப் பிரச்சினையை மையப்படுத்தி இந்தப் படம் அமையும் என்று மிஷ்கின் கூறிவந்தார்.
இந்த நிலையில் படத்தைத் தயாரிக்கவிருந்த அந்த நிறுவனம், மிஷ்கினை முதலில் தமிழில் படம் எடுத்து, அது வெற்றியடைந்தால் அந்தப் படத்தை இந்தியில் எடுக்கலாம் என்று கூறிவிட்டதாம்.
காரணம், மிஷ்கின் போன்ற தென்னிந்தியருக்கு இந்திப் பட ஆடியன்ஸ் ரசனைக்கேற்ப படமெடுக்க முடியுமா என்ற சந்தேகமாம். முதல் முறையாக நேரடிப் படம் எடுப்பதை விட, தமிழில் ஜெயிக்கும் கதையை இந்திக்கேற்ப மாற்றி எடுக்கலாம் என்று கூறிவிட்டார்களாம்.
ஏற்கெனவே லிங்குசாமி படம் டிராப்பானதில் அப்செட்டாகியிருந்த மிஷ்கினுக்கு, இந்திப் பட நிறுவனத்தின் இந்த பதில் ஏமாற்றமாகியுள்ளதாம்.

சூப்பர் அப்பு....
ReplyDelete