"தொட்டுப்பார்", "மைனா" ஆகிய இரண்டு படங்களில் நடித்ததும் முதல் இடத்திற்கு அதாகப்பட்டது, ஏ.வி.எம். நிறுவனத்தின் தயாரிப்பில் முதல் இடம் படத்தில் நடிக்க ஆரம்பித்துவிட்ட இளம் நாயகர் விதார்த் மீதும் அவரது வளர்ச்சியின் மீது யார் கண்பட்டதோ தெரியவில்லை!
நான்கு நாட்களுக்கு முன் தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை பகுதியில் முதல் இடம் படப்பிடிப்பில் ஒரு பாடல் காட்சியில் ஆடிக்கொண்டு இருந்தபோது தவறிவிழுந்து காலில் எலும்புமுறிவு ஏற்பட்டிருக்கிறது. உடனடியாக அங்குள்ள மருத்துவமனையில் முதலுதவி செய்து, சென்னை அழைத்து வந்து பூந்தமல்லி நெடுஞ்சாலை பச்சையப்பன் கல்லூரி எதிரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு விதார்த்துக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனால் முதல்இடம் படப்பிடிப்பில் சில மாற்றங்களை செய்து விதார்த் இல்லாத காட்சிகளை ஷூட் செய்து வருகிறது ஏவி.எம்!

No comments:
Post a Comment