கன்னட சினிமாவில் நடிக்க குத்து ரம்யாவுக்கு ஒரு ஆண்டு தடை விதிக்கப்பட்டுள்ளது. அடுத்து நடிகை பூஜா காந்தியிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது கன்னட திரைப்பட தயாரிப்பாளர் சங்கம்.
தமிழ், கன்னடத்தில் பிரபலமான நடிகை ரம்யா. குத்து படத்தில் சிம்பு ஜோடியாக அறிமுகமானதால் அவரை குத்து ரம்யா என்று அழைக்கத் தொடங்கிவிட்டார்கள்.
தொடர்ந்து கன்னட சினிமாவில் பரபரப்பைக் கிளப்பி வருகிறார் ரம்யா. சமீபத்தில் இவர் நடித்த கன்னடப் படம் ஒன்றின் ஆடியோ வெளியீட்டு விழாவுக்கு போகாமல் விட்டுவிட்டார். இதனால் கோபமடைந்த அந்தப் படத்தின் தயாரிப்பாளர் கணேஷ், அவர் மீது கன்னட பிலிம் சேம்பரில் புகார் செய்தார்.
எனவே கோபமடைந்த ரம்யா, நான் சினிமாவை விட்டே விலகுகிறேன் என்று அறிவித்தார். இதனால் பெரும் பரபரப்பேற்பட்டது. இந்த நிலையில், ரம்யாவுக்கு கன்னடப் படங்களில் நடிக்க ஒரு ஆண்டு தடை விதிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனைக் கேள்விப்பட்டதும் கொதித்துப் போனார் ரம்யா. "நானே சினிமாவை விட்டு விலக முடிவு செய்துவிட்ட பிறகு இவர்கள் தடை என்னை என்ன செய்யும்? ஆனால் சில கேள்விகளை நான் கேட்க விரும்புகிறேன். இந்த தயாரிப்பாளர் கணேசுக்கு நான் ரூ 9 லட்சம் கடன்வாங்கிக் கொடுத்தேன். அந்தப் பணத்தைத் திருப்பிக் கேட்டால் கொடுக்காமல் ஏமாற்றி வருகிறார். கன்னட பிலிம் சேம்பர் மற்றும் நடிகர் சங்கத்தில் புகார் செய்தும் பலனில்லை.
என் பணத்தைக் கொடுக்காமல் ஏமாற்றும் ஒரு நபரை தட்டிக் கேட்காமல், பாதிக்கப்பட்ட எனக்கு ஒரு ஆண்டு தடை விதித்துள்ளது நியாயமா?" என்று கேள்வி எழுப்பியுள்ளார் ரம்யா.
பூஜா காந்தி...
இந்த நிலையில் கன்னட சேனல் ஒன்றில் சர்ச்சைக்குரிய கருத்துக்களைக் கூறியதற்காக, நடிகை பூஜா காந்தியிடம் விளக்கம் கேட்டு கடிதம் அனுப்பியுள்ளது கன்னட திரைப்பட தயாரிப்பாளர் சங்கம்.

No comments:
Post a Comment