உயிர், மிருகம், சிந்து சமவெளி என அடுத்தடுத்து சர்ச்சையான படங்களை இயக்கி சர்ச்சை டைரக்டராக உருவெடுத்திருக்கும் டைரக்டர் சாமி, அடுது்து சித்திரம் என்ற படத்தை இயக்க தயாராகி வருகிறார். படத்தின் நாயகனாக வெளுத்து கட்டு கதிர் நடிக்க, நாயகியாக தீபிகா படுகோனேவின் தங்கை சஞ்சிதா படுகோனே நடிக்கவுள்ளார். சிந்து சமவெளி படத்தில் மாமனாரும், மருமகளும் கள்ள உறவு வைத்துக் கொள்வது போன்ற காட்சி எடுத்ததால் பல தரப்பினரிடையே எதிர்ப்பு கிளம்பியது. அந்த படத்திற்கு பிறகு எல்லோருக்கும் பிடிக்கிற படம் எடுடான்னு என் அம்மா சொன்னாங்க. அவங்க சொன்னதுக்காக எடுக்கப்போகும் படம்தான் இந்த சித்திரம். நிச்சயமா இது ஒரு குடும்ப சித்திரமாகத்தான் இருக்கும், என்று ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார் டைரக்டர் சாமி.
அவர் தனது பேட்டியில், பாலியல் சம்பந்தப்பட்ட கதையை முதல்ல எடுத்து ஹிட் ஆனதால் திரும்பவும் அதே மாதிரி எடுக்க வேண்டியதாயிடுச்சி. இரண்டாவதாக மனுஷன்கிட்ட இருந்து காதலை எப்படி பிரிக்க முடியாதோ, அதே மாதிரி காமத்தையும் பிரிக்க முடியாது. காமம் மனுஷனை கவர்ந்து இழுக்கிற கமர்ஷியல் சமாச்சாரமா இருக்கு. பெரிய ஹீரோ அல்லது இயக்குனர்கள் இருந்தால் திரையரங்குகளுக்கு மக்களை அவங்களே இழுத்துட்டு வந்திடுவாங்க. இல்லைன்னா அங்கே மக்களை உள்ளே இழுத்துட்டு வர்றதுக்கு ஒரு விஷயம் தேவைப்படுது. ஒரு பாலியல் தொழிலாளி கூட தன்னை மோசமானவங்கன்னு சொல்லிக்க விரும்ப மாட்டாங்க. அப்புறம் நான் கெட்டவன்னு சொல்லிக்க எனக்கு மட்டும் ஆசையா என்ன? உதிரிப்பூக்கள், ஆசை, வாலி, பூமணி, கலாபக்காதலன் படங்கள்ல மாமா தன்னோட கொழுந்தியாள் மேல ஆசைப்படுற மாதிரி காட்டுனாங்க. முதல் முறையா ஒரு அண்ணி கொழுந்தன் மேல ஆசைப்படுற மாதிரி காட்டினேன். நெற்றிக்கண் படத்துல மாமனார் பண்ணினதை இங்கே மருமகள் பண்ணினதா காட்டுணா ஏத்துக்கல. இங்கே மேல்சாவனிஸம் இருக்கு. ஆண்கள் அப்படி பண்ணினா ஏத்துக்கிறாங்க. அதையே ஒரு பெண் பண்ணுற மாதிரி காட்டுனா தப்புன்னு சொல்றாங்க, என்று கூறியுள்ளார்.
இன்றைய சினிமா செய்திகளை படிக்க இங்கே
No comments:
Post a Comment