இயக்குநர் சமுத்திரக்கனியின் கண்டுபிடிப்பான கேரளத்து பைங்கிளி அனன்யா, பாலிவுட்டுக்கு பறக்கப்போகிறார். தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் நடித்துவரும் அனன்யாவுக்கு இந்தி படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது.
'நாடோ டிகள்' படத்திற்குப் பிறகு 'சீடன்' படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு தரிசனம் கொடுத்திருக்கும் அனன்யாவின் நடிப்பு அனைவரையும் அசரவைத்திருக்கிறது. அப்படியே கொஞ்சம் பாலிவுட்டையும் அசரவைக்க தயாராகி வருகிறார். இந்தியில் மாதவனுடன் ஜோடிசேர இருக்கும் அனன்யா, அதற்காக இந்தி மொழியையும் கற்றுவ ருகிறார்.
இந்தி படங்களில் நடித்தாலும், அதே சமயம் தென்னிந்திய படங்களிலும் நடித்து வருவாராம்.

No comments:
Post a Comment