தமிழ் படத்தையே தமிழில் ரீமேக்குகிற நம்பிக்கையை கொடுத்த படம் பில்லா! அப்படம் ஓடிய ஓட்டத்தில் எதையெதையோ ரீமேக்கினார்கள். லேட்டஸ்ட்டாக வந்த நடுநிசி நாய்கள் கூட சிவப்பு ரோஜாக்கள் படத்தின் வெளுத்துப்போன ரீமேக் என்பவர்களும் உண்டு. போகட்டும்...
பில்லா படத்தின் இரண்டாம் பகுதியை எடுக்க திட்டமிட்டிருந்தார் அஜீத். இதற்காக பில்லாவை இயக்கிய அதே விஷ்ணுவர்த்தனையே ஒப்பந்தம் செய்திருந்தார்கள். பேச்சு வார்த்தை லெவலிலேயே இதிலிருந்து விலகிக் கொண்டார் அவர். காரணம் சுவிஸ் பேங்க் ரகசியமாகவே வைக்கப்பட்டிருக்கிறது இன்னும்.
இப்போது இந்த படத்தை உன்னைப்போல் ஒருவன் படத்தை இயக்கிய சக்ரி டோலெட்டி இயக்கப் போகிறார். (தமிழ் எழுதவும் படிக்கவும் பேசவும் தெரியாத இயக்குனர்கள் தமிழ் படத்தை இயக்குவதுதான் இப்போதைய ஃபேஷன் போலிருக்கிறது) இந்த படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார்கள் இப்போது.
பில்லா-2 ஐ தயாரிப்பது இந்துஜா குழுமத்தின் ஐஎன் என்டர்டெயின்மென்ட். இவர்களுடன் ஒரிஜனல் பில்லா பட தயாரிப்பாளர் பாலாஜியின் மகன் சுரேஷ் பாலாஜி இணை தயாரிப்பாளராக பொறுப்பேற்றிருக்கிறார்.
ஒரு சந்தோஷமான செய்தி. இப்படத்தின் இசை யுவன்சங்கர்ராஜாவாம்!

No comments:
Post a Comment